தமிழீழம் அணியினர் 2:1 என்ற இலக்கினடிப்படையில் ஜோர்க்சைர் அணியினை வெற்றிகொண்டது!📷

தமிழீழம் அணியினர்அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையிலான  2020 உலகக்கோப்பைக்கான உதைபந்தாட்டப்போட்டியில் பங்குபெறப்போகும் அணிகளுக்கான காலிறுதித் தேர்வுப்போட்டி நேற்று(10/10/2019) இங்கிலாந்து நாட்டில் உள்ள Ingfield stadium
Prospect Rd, Ossett W5 9HA என்னும் இடத்தில் 19.45 மணியளவில் ஆரம்பமானது.

இப்போட்டியில் ஜோர்க்சைர்  (Yorkshire) அணியுடன் தமிழீழம் அணியினர் மோதினர்.
மிகவும் மோசமான காலநிலை மாற்றங்களுக்கிடையிலும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் தமிழீழம்  அணியினர் 2:1 என்ற இலக்கினடிப்படையில்  ஜோர்க்சைர் அணியினை வெற்றிகொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளனர்.

இப்போட்டியில் எமது வீரர்களின் உழைப்பும், தன்னம்பிக்கையும் அவர்களது வெற்றிப்படி நோக்கிய பயணத்திற்கான உந்துசக்தி எனலாம்.
காலிறுதிப் போட்டியின் அடுத்த நிலைக்கு முன்னேறிய எமது தமிழீழம் அணியினருக்கு எமது பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.
அடுத்தடுத்து வரவிருக்கும் போட்டிகளிலும் அவர்கள் வெற்றி இலக்கை அடைய வாழ்த்துகிறோம்.
Powered by Blogger.