“பெண்கள் சமஉரிமை பெற்று சகல அடக்கு முறைகளிலிருந்தும்.விடுதலை. பெற்று ஆண்களுடன் சமத்துவமாக கெளரவமாக வாழக்கூடிய புரட்சிகர சமுதாயமாகத் தமிழீழம். அமைய. வேண்டும் என்பதே எனது. ஆவல்!!


வே.பிரபாகரன்.

தமிழீழத் தேசியத் தலைவர்.
ஒக்டோபர் 11


 பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள் (International Day of the Girl Child, Day of the Girl, International Day of the Girl) என்பது ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த ஒரு பன்னாட்டு நினைவு நாள் ஆகும்.


பெண் குழந்தைகளை பெற்றால் கலங்கும் பெற்றோர் இன்னமும் தமிழர்கள் மத்தியில் வாழ்வது பெரும் கொடுமை!
"எந்த குழந்தையும் கையில் கிடைத்த வரமே!" என போற்றுவோம்!
அதிலும் பெண் குழந்தைகளை பெற்றவர்கள் இன்னமும் பேறு பெற்றவர்கள்! ஏனெனில் அவர்கள் தேவதைகளோடு வாழ்கிறார்கள்!
வீட்டில் தம்மை பெற்ற தாய்க்காக ஏங்கும் ஒவ்வொருவரும் தாயே சேயாக பெற்ற பேறை பெண் பிள்ளைகளை பெற்று அடைகிறார்கள் என்பதை உணர்ந்தால் போதும் பெண் பிள்ளைகளை சுமை என எவரும் எண்ண மாட்டார்கள்.
பெண்குழந்தைகளுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும். வரதட்சணை கொடுக்க வேண்டும் என மனம் மருகும் பெற்றோரே பெண் குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்க வேண்டியவை:
1. கல்வி: ஏட்டு கல்வி மட்டுமல்ல வாழ்வியல் கல்வியும்
2. வீரமும் தன்னம்பிக்கையம்
3. அன்போடும் பண்போடும் வாழும் மாண்பு
பெண்களும் வேண்டிய கல்வி ஆயுதத்தை அவர்களுக்கு முடிந்தவரை கொடுத்து விடுங்கள்!. அவர்கள் உலகை வென்று சாதனை படைப்பார்கள்!
பெண் குழந்தைகளுக்கான உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்த அக்டோபர் 11 ஆம் நாளை பன்னாட்டு பெண் குழந்தைகள் தினமாக ஐநா 2011 ஆம் ஆண்டில் அறிவித்தது.
இந்த நாள் கனடாவினால் தீர்மானிக்கப்பட்டு பிற நாடுகளால் முன்மொழியப்பட்டு உலகமே ஏற்றுக்கொண்டது.
இந்நாளில் உலகமெங்கும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பாலின சமத்துவம், சகல துறைகளிலும் சமத்துவமான வாய்ப்பு, கல்வி உரிமை, பாதுகாப்பு, அங்கீகாரம், வளர்ச்சியை அதிகரித்தல், வன்முறைகளை களைதல் போன்றனவற்றிற்கு சமூகம் ஒத்துழைப்புக் கொடுத்து இந்தப்பெண் குழந்தைகள் நினைத்ததை சாதிக்க உறுதுணையாக நின்று, இவர்கள் பின்னாளில் சாதனைப்பெண்களாக மிளிர வைக்கும் அவசியத்தை நினைவுகூரும் நாள்.
பெண் குழந்தைகள் பிறப்பு என்பது பெற்றோருக்கு ஏற்படும் பொருளாதார சுமை என்கின்ற கருத்தியலை மாற்றியமைக்கவும் இவ்வுலகில் உயிர்கள் ஒவ்வொன்றும் தோன்றவும் சுதந்திரமாய் வாழவும் இயற்கையான உரிமைகள் உள்ளன என்பதை உணர்த்தவும் இந்நாளில் பல நடவடிக்கைகளை தன்னார்வ அமைப்புகள் மக்கள் நல அரசகள் உலகம் முழுவதும் முன்னெடுக்கப்படுகிறது.
பெண்களை தலைமைகளாக கொண்ட தாய் வழி சமுதாயத்தின் உச்சபட்ச பெருமைகளையும் புரட்சிகர போராளிகளை பெண்களாகவும் கொண்ட தமிழ் வீரத்தின் உச்ச வீரமும் ஆளுமையும் கொண்ட பெண்களின் அதி தீவிர சாதனைகளையும் கண்ணுற்ற எங்கள் தமிழினம் ஆரிய பிற்போக்கு பெண்ணடிமை சிந்தையில் இருந்து தன்னை மீட்டு எழுகை கொண்ட தமிழ் பெண்களை கொண்ட சமூகமாக தற்காத்து முன்னோக்கி பயணிப்பதற்கு தமிழிய வரலாற்று பேரெழுச்சியே காப்பரணாக உள்ளது.
பெண்மை வாழ்க என போற்றுவோம்!
பெண்கள் அடிமைத்தளைகளை அறுத்து சாதனை படைக்க வாழ்த்துவோம்!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.