முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி உயர்தர வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் யோகேஸ்வரன் கவிர்சன்( வயது 18 ) தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார் வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை பி- ப - 2-00 மணியளவில் பாடசாலை நிறைவு பெற்று வீடு திரும்பியுள்ளார்


சற்று நேரத்தில் வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது சிறு வயது முதல் தந்தை இன்றி தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்தவர் தாயாரின் கஷ்டநிலை அறியாது விபரீதமான முடிவு எடுத்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது இதேவேளை மாணவனின் உயிரிழப்பிற்கான காரணம் எதும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


No comments

Powered by Blogger.