கீழடி - உலக தமிழர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்!

கீழடி நான்காம் கட்ட அகழ்வாய்வு அறிக்கையை தமிழக அரசு வெளியிட பின் சில போலி நபர்கள் ஆய்வாளர், ஆராய்ச்சியாளர் போன்ற பெயர்களில் தமிழகத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சர்வதேச கருத்தரங்கு என்கிற பெயரில் கீழடி தமிழர் நாகரிகத்தை "திராவிட நாகரிகம்" என்ற பெயரில் ஆவணப்படுத்துவதும் அறிக்கை சமர்பிப்பதுமாக மிகப்பெரும் "அடையாள திருட்டை" மோசடியை செய்கிறார்கள். இதற்கெல்லாம் மேலாக இந்திய பாராளுமன்றத்தில் சு.வெங்கடேசன் என்னும் பாராளமன்ற உறுப்பினர் திமுக மூலம் கம்யூனிஸ்ட் வேட்பாளராக வென்றவர் கீழடி தமிழர் நாகரிகத்தை "திராவிட நாகரிகம்" என்று ஆவணப்படுத்தியுள்ளார்.


தமிழீழத்தில் 2009ஆண்டு இந்திய அரசுடன் "திராவிடம்" என்னும் சமஸ்க்ரித சொல்லை கொண்ட தமிழகத்தில் அரசியல் செய்யும் காட்சிகள் தமிழின படுகொலைக்கு துணைபோயின, அதன் தொடர்ச்சியாக மொழியால், கலையால், பண்பாட்டால், இனத்தால் தமிழகம் மற்றும் ஈழம் என்கிற நிலப்பரப்பில் வாழும் மக்களின் தேசிய இன வரையறையை சிதைக்கவும், சமீபத்திய கீழடி அகழ்வின்மூலம் தமிழர்கள் தான் ஆதி குடிகள் என்கிற நிரூபணம் தமிழீழ நிலப்பரப்பிற்க்கும் பொருந்தும் அதை உடைக்கும் வேலையில் திராவிட திருட்டு கும்பல் களமிறங்கியுள்ளது.


தமிழக மற்றும் ஈழ தமிழர்கள் நீங்கள் வசிக்கும் நாடுகளில் உள்ள அகழ்வாராய்ச்சி துறை( Archeology Department), மானுடவியல் துறை (Anthropological Department) உங்கள் தனிப்பட்ட பெயரிலோ அல்லது உங்கள் தமிழ் சங்கம் மூலமாகவோ ஒரு கடிதத்தை பின்வரும் வாசகங்கள் கொண்டு "2600 வருட பழமையான தமிழர் என்னும் தேசிய இனத்தின் அகழ்வு படிமங்கள் கிடைத்துள்ளன ஆனால் தமிழர் நாகரிகம் அதனினும் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது ஏனேனில் என்னும் விரிவான அகழ்வு ஆய்வுகள் நடைபெறவில்லை,


 சில அரசியல் காரணங்களுக்காக தங்கள் அரசியல் சுயலாபங்களுக்காக திராவிடம் நாகரிகம் என்று அடையாள திருட்டை செய்கிறார்கள்" ஆங்கிலத்திலேயே அல்லது அந்த நாட்டின் மொழியிலோ எழுதுங்கள். தமிழக தொல்லியல் துறையின் நான்காம் கட்ட ஆங்கில அறிக்கையும் இணையுங்கள்.


ஒரு நாட்டிற்க்கு ஒருவர் மட்டுமே செய்தல் போதாது பலரும் உங்கள் கடிதத்தை அனுப்புங்கள், வெளியுலக ஆரய்ச்சியாளர்களுக்கு கீழடியை பற்றி தெரியவையுங்கள் மற்றும் அடையாள திருட்டை தடுக்க உதவுங்கள்.

அன்புடன்
அதியமான், நார்வே.
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.