யாழில் நந்திக்கடல் பேசுகிறது நூல் வெளியீட்டுவிழா விரைவில்!

யாழில் நந்திக்கடல் பேசுகிறது நூல் வெளியீட்டுவிழா எதிர்வரும்


ஞாயிறுக் கிழமை 13/10/19  

காலை 10.30 மணிக்கு 

கலைத்தூது கலையகம்
286 பிரதான வீதி
யாழ்ப்பாணம்

கலைத்தூது கலையகம் அரங்கில் இடம்பெற உள்ளது. இவ் வெளியீட்டுக்கு அணைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் ஊறுகாய் நன்பர்கள் குழுமம்.
உங்கள் வரவை நாடிநிற்கின்றோம்.

புதியதொரு முயற்சியின் வெற்றியை உங்கள் அனைவருடனும் பகிர்வதில் உவகைகொள்கிறது ஊறுகாய் தளம்.

போர் மௌனித்த முதல் தசாப்தத்திற்குள் வாழ்கிறோம். இதற்குள் நடந்தேறிய விடயங்கள் பலவற்றை செய்தியாக, கட்டுரையாக, காணொலியாக, நிழற்படமாகக் கடந்திருக்கிறோம். எல்லாவற்றையும் கூட்டிக்கழித்து நினைவுமீட்டி, இந்தத் தசாப்தத்தில் நடந்தவற்றை நினைவுகூரக் கேட்டால் எதுவும் நினைவில் இருப்பதில்லை. இடறிப்போவோம். தடுமாறிப்போவோம். நாளாந்தம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் நேற்றைய நாளை மறக்கச் செய்துவிடுகின்றன. ஆனால் கடந்த இந்தப் பத்தாண்டுகள் மிகக் கூர்மையானவை. தமிழர்களு்ககு எதிரான சதிகள் நிரம்பியவை. 2009 மே 18 இன்னொரு முகத்தைக் கொண்டது. உலகில் புரட்சி மெளினிப்புக்குப் பின்னரான இனங்கள் தமது கடந்த காலத்தைப் பல்வேறு இலக்கிய வடிவங்களாகப் பதிவுசெய்திருக்கின்றன. ஆனாலம் நாம்...?இந்த சிந்தையுணர்ந்து, அவற்றைக் காலக்கிரமப்படி ஒழுங்குசெய்வது மிகப்பெரிய காலக்கடமையெனக் கருதினோம்.

அதற்காக நாம் மேற்கொண்ட முயற்சியின் பலனாக ”நந்திக்கடல் பேசுகிறது” என்கிற எழுத்தாவணம் திருப்பெற்றிருக்கிறது. நம் கடந்த காலத்தைக் கனதியோடு அடுத்ததடுத்த தலைமுறைக்குக் கையளிக்கப் பொறுப்புள்ள ஒவ்வொரு வீட்டிலும் இவ்வாவாணம் முதுசமாக இருக்கவேண்டும் என்பது எமது அவா.

இந்த எழுத்தாவணத்தை ஊறுகாய் மற்றும் வொய்ஸ் ஆகியன இணைந்து வெளியிடுகின்றன. அந்தவகையில் ஊறுகாயின் முதல் பதிப்பாக்க முயற்சியும் இதுவாகும். இந்தப் பதிப்பாக்கத்தின் பின் கிடைத்திருக்கும் உற்சாகம் காரணமாக தொடர்ந்தும் ஈழத்தமிழர்களது வரலாறு, அரசியல், பண்பாடு, கலை கலாசார விழுமியங்களைப் பதிப்பாக்கம் செய்யும் எண்ணம் உருவாகியிருக்கிறது. அதனை உலக நடப்புக்கேற்ற படைப்பாக்கத் திறனுடன் உங்கள் முன்கொண்டுவருவோம்.

இந்நூலின் வெளியீட்டு நிகழ்வு அண்மையில் ஜெர்மனியில் நடைபெற்றது. வரும் 13.10.2019 அன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஏனைய தமிழர் வாழும் நாடுகளிலும் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். இவை அனைத்தும் சாத்தியப்பட்டது உயிரிலும் மேலான எங்கள் நண்பர்களினால்தான். எனவே தொடர்ந்தும் எங்களது முயற்சிகளுக்கு ஆதரவைத் தாருங்கள்.

நன்றி
ஊறுகாய் தள நண்பர்கள்.


Powered by Blogger.