இ.தொ.காவுக்கு திலகர் எம்.பி. விடுத்துள்ள பகிரங்க சவால்!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் முன்வைக்கப்பட்ட 32 கோரிக்கைகளில் ஐக்கிய தேசிய முன்னணியால் நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகள் எவை என்பதை அக்கட்சி பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் வலியுறுத்தினார்.
தொழிலாளர் தேசிய முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று ஹட்டனில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தமது முப்பத்திரண்டு கோரிக்கைகளை முன்வைத்து பொதுஜன பெரமுனவுடன் ஒருபக்கமும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் மறுபக்கமும் பேச்சுவார்த்தைகள் நடாத்தியது.
அந்த முப்பத்திரண்டு கோரிக்கைகளில் எந்த கோரிக்கையை ஐக்கிய தேசிய முன்னணி நிராகரித்தது என்பதை பேச்சுவார்த்தைகள் நடாத்திய
தார்மீகத்தின் அடிப்படையில் இ.தொ.கா வெளிப்படுத்த வேண்டும். இ.தொ.காவால் ஐக்கிய தேசிய முன்னணியிடம் முன்வைத்து அவர்கள் நிராகரித்த கோரிக்கைகளை நாங்கள் செய்து காட்டுவதை சவாலாக ஏற்கிறோம்.
எதிர் வரும் ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக தொழிலாளர் தேசிய முன்னணிக்கோ தமிழ் முற்போக்கு கூட்டணிக்கோ தடுமாற்றம் இல்லை. கடந்த ஐந்து வருடகாலமாக ஓரணியாக ஒரு கூட்டணியாக செயற்பட்டதன் அடிப்படையில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து தேர்தலை சந்திப்பது என தீர்க்கமான முடிவினை எடுத்துள்ளோம்.
ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதான கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் வேட்பாளராக தெரிவு செய்யப்படுவதற்கு முன்னரும் கூட நாம் இந்த நிலைப்பாட்டிலேயே இருந்தோம்.
ஆனால் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆனபின்னும் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் ஐக்கிய தேசிய முன்னணி யாரை வேட்பாளராக அறிவிக்கிறது என பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வெற்றி வேட்பாளர் சஜித் என அறிவிக்கப்பட்ட பின்னர் எட்டு சுற்று பேச்சுவார்த்தைகளை நடாத்தினர்.
எந்த அடிப்படையில் அந்த பேச்சுவார்த்தைகள் நடந்தன என்றால் முப்பத்திரண்டு கோரிக்கைகள் வைத்து என்கிறார்கள். முப்பத்திரண்டு வருடகாலமாக அமைச்சு பதவி வகித்தவர்கள் ஒரு தடவைக்கு ஒரு கோரிக்கை என நிறைவேற்றி இருந்தாலே அவர்கள் கோரிக்கை எல்லாமே நிறைவேற்றப்பட்டு இருக்கும்.
நாங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியாக கடந்த ஐந்து வருடத்தில் செய்த பணிகளின் தொடர்ச்சியாக பத்து அம்சங்களை புதிய ஜனநாயக முன்னணியின விஞ்ஞானபனத்தில் சேர்க்கவுள்ளோம்.
அவர்களது முப்பத்திரண்டு கோரிக்கைகளையும் பொதுஜன பெரமுன ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் அவர்களது விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கபடும் என்பதை வரவேற்கிறோம். அந்த முப்பத்திரண்டையும் அந்த விஞ்ஞானத்தில் பார்க்க ஆவலாக உள்ளோம்.” என்றார்.

கருத்துகள் இல்லை