இலங்கை சமூக சேவையாளர்களுக்கு நெல்சன் மண்டேலா சமாதான தூதுவர் விருது!!📷

ஸ்ரீ லங்கா சாதனையாளர் மன்றம் ஏற்பாடு செய்த நெல்சன் மண்டேலா சமாதான மற்றும் சமூக சேவைக்கான 2019ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) மாலை நடைபெற்றது.


இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கைக்கான தென் ஆப்ரிக்கா தூதுவர் ரொபினா பீ மாக்ஸ் கலந்துகொண்டு  நெல்சன் மண்டேலா சமாதான விருதினை வழங்கி வைத்தார்.

நெல்சன் மண்டேலா சமாதான மற்றும் சமூக சேவைக்கான 2019ஆம் ஆண்டுக்கான விருதினை புரவலர் ஹாசிம் உமர், இலங்கை நெய்னார் சமூக நல காப்பக தலைவர் இம்ரான் நெய்னார், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் முஜீப் ஜீரான், ரகு இந்திரகுமார், செய்யது அலியார், முஹம்மது ரிப்கி, நில்மினி பிரியங்கா, சாகர லக்மால், சப்ரினா பாரிஸ் மற்றும் சங்கைக்குரிய தனபட்டேகம சோபித தேரர் ஆகியோருடன் மேலும் பலருக்கு இலங்கைக்கான தென் ஆப்ரிக்கா தூதுவர் ரொபினா பீ மாக்ஸ் வழங்கி வைத்தார்.

உலக ஆணழகன் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்ற ராஐகுமாரனுக்கு ஸ்ரீலங்கா கீர்த்தி பட்டமும் இந்நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டது.

இவ்விழாவில் கெளரவ அதிதிகளாக டாக்டர் டீமார் டூரிங், மன்றத்தின் தலைவர் பேராசிரியர் ஏ.டெக்ஸ்டர் பெர்ணான்டோ, உபதலைவர் டாக்டர் தரிந்து விஜயநாயக்க ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.