வில்லியம் – கேற் தம்பதி பாக், பெண்களின் கல்வி மற்றும் பொருளாதாரம் குறித்து கரிசனை!!

பாகிஸ்தானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் அவரது பாரியார் கேற் மிடில்டன் ஆகியோர் பாகிஸ்தானில் உள்ள பெண்கள் பாடசாலைக்கு சென்று குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர்.


அரச தம்பதி ஐந்து நாட்கள் விஜயமாக நேற்று மாலை (திங்கட்கிழமை) பாகிஸ்தானுக்கு சென்றனர். இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரச தம்பதியை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி மற்றும் அவரது மனைவி நூர் கான் ஆகியோர் விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர்.

சுற்றுப்பயணத்தின் இரண்டாம் நாளான இன்று இஸ்லாமாபாத்தில் உள்ள மாதிரி பெண்கள் கல்லூரிக்கு சென்று பார்வையிட்டனர்.

குறித்த கல்லூரி பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நான்கு முதல் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஒரு அரச நிறுவனமாகும். இது பிரித்தானியாவின் ‘ரீச் ஃபெர்ஸ்ற்’ (Teach First) திட்டத்தின் அடிப்படையில் பயனடையும் கல்வி நிறுவனமாகவும்.

அதன் வெவ்வேறு பகுதிகளை பார்வையிட்ட அரச தம்பதியர், கணித வகுப்பையும் ஆய்வு செய்தனர். பின்பு குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர்.

பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதில் இந்தக் கல்வி நிறுவனம் முக்கியமானதாகவும், பாகிஸ்தானில் பெண்கள் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதில் முன்னோடியாக இருப்பதாகவும் அதன் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது பாரியார் கேற் மிடில்டன் ஆகியோர் இமயமலையின் அடிவாரத்தில் உள்ள மார்கல்லா மலைகளுக்கு சுற்றுலா செல்ல உள்ளனர்.

அத்துடன் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிஃப் அல்வி மற்றும் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்கள் என்று உள்ளூர் நாளிதழ்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2006 ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸ் மற்றும் இளவரசி கமிலா ஆகியோர்  பாகிஸ்தானுக்கு விஜயம் செய்திருந்தார்கள்.

அதன்பின்னர் தற்போதுதான் பிரித்தானிய அரச தம்பதி பாகிஸ்தானிற்கு விஜயம் செய்துள்ளனர்.

இளவரசர் வில்லியமின் தாயாரான இளவரசி டயானா, இம்ரான்கானால் நிர்மாணிக்கப்பட்ட புற்றுநோய் மருத்துவமனைக்கு, நிதிதிரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 1990 ம் ஆண்டு பாகிஸ்தானுக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.