ராஜீவ் காந்தி கொலை குறித்து பேசிய சர்ச்சைப் பேச்சு தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் காந்தி கொலை குறித்து பேசிய சர்ச்சைப் பேச்சு தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறது.
விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில், “ராஜீவ் காந்தியை கொன்றது நாங்கள்தான்” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரசார் இது தொடர்பாக தமிழகம் முழுதும் போலீஸ் நிலையங்களில் சீமான் மீது புகார் கொடுத்து வருகின்றனர். காங்கிரஸ் மட்டுமல்ல தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், முன்னாள் மத்திய அமைச்சரான பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர், ‘சீமான் இப்படி பேசியிருக்கக் கூடாது” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்த சீமான், ‘எப்படி பேச வேண்டும், என்னென்ன பேச வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வகுத்திருக்கிறதா? ‘ என்று கேட்டார்.
இந்த நிலையில் இன்று (அக்டோபர் 15) சென்னையில் இரு தொகுதி இடைத்தேர்தல்கள் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிராத சாஹு.
அப்போது அவரிடம் சீமான் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தில்தான் சீமான் சர்ச்சைக்குரிய முறையில் பேசியிருக்கிறார் என்று எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. சீமான் பேச்சு குறித்து முழுமையான அறிக்கை அளிக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலரிடம் கேட்டிருக்கிறோம். அந்த அறிக்கை தேர்தல் ஆணையத்துக்குக் கிடைத்ததும் அது தொடர்பாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார் சத்ய பிரதா சாஹு.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை