ஜெயலலிதாவைப் பாராட்டும் ஸ்டாலின்!
நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்காக இன்று (அக்டோபர் 15) இரண்டாம் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
சாவளைக்காரன் குளம் பகுதியில் இன்று காலை பெண்கள், ஆண்கள் என திரண்டிருந்த கூட்டத்தின் இடையே பேசிய ஸ்டாலின், முதலில் , ‘நான் எப்படி இருக்கேன்?” என்று தாய்மார்களை கலகலக்க வைத்தார்.
“முதல்ல நான் உங்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன். நெல்லை மக்களவை தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஞானதிரவியத்தை வெற்றிபெற வச்சு எம்.பி. ஆக்கினீங்க. அதுக்காக உங்களுக்கு முதல்ல நன்றி சொல்லிக்கிறேன்” என்றவர் தொடர்ந்தார்.
“இங்க பெண்கள் அதிக அளவு வந்திருக்கீங்க. சீவி சிங்காரிச்சு புதுப் புடவை கட்டிக்கிட்டு வந்திருக்கீங்க. இந்தப் பிள்ளைய டிவில பாத்துட்டு, பத்திரிகையில பாத்துட்டு, நேர்ல பாக்க எப்படி இருக்குனு பார்க்க வந்திருக்கீங்க.நான் எப்படி இருக்கேன்?” என்று ஸ்டாலின் நகைச்சுவையாக கேட்க, பெண்கள் எல்லாம் சூப்பரா இருக்கீங்க என்று கைதட்டி ஆரவாரம் செய்தனர். அப்போது தூரத்தில் நின்ற ஒரு திமுக நிர்வாகி, ‘நம்ம தலைவர் உதயநிதிக்கு டஃப் பைட் கொடுப்பார் போல’ என்று சிரித்துக் கொண்டார்.
அதன் பின் விஷயத்துக்கு வந்த ஸ்டாலின், “இப்ப நடப்பது அதிமுக ஆட்சியே இல்லை. இது எடப்பாடி ஆட்சி. எடப்பாடி ஆட்சினு கூட சொல்ல முடியாது, பாஜகவின் எடுபிடி ஆட்சி. அதிமுக ஆட்சின்னா அது எம்.ஜி.ஆர். தொடங்கி வச்சது. அப்புறம் ஜெயலலிதா நடத்திய ஆட்சி. ஜெயலலிதா என்னதான் சர்வாதிகாரியா இருந்தாலும், ஊழலெல்லாம் செஞ்சாலும் நம் நாட்டு மரியாதைய தமிழ்நாட்டு கௌரவத்தை மத்திய அரசுக்கிட்ட விட்டுக் கொடுத்ததில்ல. ஆனால், இப்ப மத்திய அரசுக்கு அடிபணிஞ்சு ஆட்சி நடக்குது. நம்ம சுதந்திரம் நம்மளை விட்டுப் போயிட்டிருக்கு.
எந்த மொழில பேசணும், எதை படிக்கணும்னு அங்கயிருந்து உத்தரவு வந்துக்கிட்டிருக்கு. இந்தி மொழி விரும்புறவங்க, சமஸ்கிருதம் விரும்புறவங்க பேசட்டும். ஆனா நம்ம ஊர் தபால் ஆபீஸ்ல ரயில்கள்ல, பேங்க் செக்குல இந்திதான் இருக்கணும்னு சொன்னா எப்படி ஏத்துக்க முடியும்?” என்று கூறினார் ஸ்டாலின்.
தொடர்ந்து பேசியவர், “ ஸ்டாலின் வீடு வீடா போயி என்ன பண்ண முடியும்னு எடப்பாடி கேட்கிறார். அவர் ஆட்சியில் இருந்து செய்யாததால்தான் நாங்க இப்படி மக்களை சந்தித்து குறை கேட்கிறோம். எட்டு வருஷமா எதிர்க்கட்சியா இருந்தாலும் நாங்கதான் மக்களை தொடர்ந்து சந்தித்து வருகிறோம். ஆளுங்கட்சி மக்களை சந்திக்க வர்றதே இல்லையே. ஸ்டாலின் மனு வாங்கி என்ன செய்யப் போறாருனு கேட்கிறாங்க. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு நாங்கள் என்ன செய்வோம்னு காட்டுகிறோம்” என்றார் ஸ்டாலின்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை