தோல்வி பெரிதாய் வலிக்கிறது.!!

ஒரு ஆகப்பெரும் நம்பிக்கையை
உன்மேல் வைத்துவிட்டதால் தான்
நான் இருக்க நீதொலைவாய் என்பது நம்பமுடியாமல் போனது

எதிர்பார்க்காத உன்வருகையில்
எந்த அதிசயமும் இருக்கவில்லை
ஆனால் கடவுள்களுக்கு அப்பாற்பட்ட சக்தியாய்
உன்மேல் வைத்து தொலைத்த அன்பில் தான்
மறுபடியான தோல்வி பெரிதாய் வலிக்கிறது
இனி  என்ன
எல்லாத்துன்பங்களிலிருந்தும்
என்னை மீட்ட நீயே
மறுபடி ஆகப்பெரும் துன்பத்துள் வீழத்திப்போனாய்
இதற்குமேலான எந்த நம்பிக்கைகளும் எனக்கு இல்லை

வாழ்ந்துவிட்டுப்போகிறேன்
அப்படி என்ன இந்த பூமியில் மிச்சமென்று பார்க்க

#பேனா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.