பல்கலை மாணவர்களின் கூட்டத்தில் நடந்தது என்ன?
பல்கலைக் கழக மாணவர்களால் அழைக்கப்பட்ட தமிழ் கட்சிகள் மாகாண சபையை நடைமுறைப்படுத்தல் அதற்கு அதிகாரம் வழங்கல் உட்பட பல்வேறு ஏற்று கொள்ளப்பட முடியாத விடயங்களை தீர்வு திட்ட யோசனைகளாக முன்வைத்த போதும் எமது முயற்சியால் ஓர் கனதியான அறிக்கை எட்டப்பட்டது.
குறித்த அறிக்கையில் ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு தற்போதும் அரசியலமைப்பு சபையில் முன்வைக்கப்பட்டுள்ள ஒற்றையாட்சி வடிவிலான இடைக்கால அறிக்கையை நாம் நிராகரிக்கின்றோம் என்று ஓர் விடயம் சேர்க்கப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கையாக இருந்தது.
காரணம் குறித்த இடைக்கால அறிக்கையை அடிப்படையாக வைத்து அரசியலமைப்பு மாற்றம் செய்ய இங்குள்ள தமிழ் கட்சி ஒன்றும் ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டாக செயற்படுகின்றமையே ஆகும்.
குறித்த விடயம் ஆராயப்பட்ட போது திரு சுமந்திரன் அவர்கள் பெரும்பாலும் இருக்கவில்லை. அங்கிருந்த தமிழ் அரசு கட்சியின் மாவை அண்ண மற்றும் புளொட் சித்தார்த்தன் அண்ண ஆகியோர் தாம் இடைக்கால அறிக்கையை நிராகரிக்க மாட்டோம் அது முடிந்த விடயம் அதுபற்றி பேச தேவை இல்லை என்றார்கள்.
ஈ.பி.ஆர்.எல்.எப், விக்னேஷ்வரன் ஐயா தரப்பு, ரெலோ ஆகியன தாம் எப்பவோ இடைக்கால அறிக்கையை நிராகரித்துவிட்டோம் ஆனால் அவ்வறிக்கை குப்பை தொட்டியில் கிடக்கின்றது அதை பற்றி நாம் பேசுவதில் அர்த்தமில்லை என்றார்கள். பின்னர் எங்கோ இருந்து வந்த சுமந்திரன் அவர்கள் நாம் இடைக்கால அறிக்கையை ஏற்கின்றோம் அதன் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் வரும் ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளோம் என்றார்.
அதன் பின்னர் விக்னேஷ்வரன் ஐயாவும் அந்த இடைக்கால அறிக்கையின் படி தான் பேச்சுவார்த்தை தொடரப்பட வேண்டும் என்றார். அதன் பின்னரும் அந்த இடைக்கால அறிக்கையை நிராகரிக்கின்றோம் என்ற எவரும் எமது கோரிக்கையை ஏற்கவில்லை.
நாம் அழகாக மக்களுக்கு காண்பிக்க சமஷ்டி சுயநிர்ணய உரிமை தேசம் இறமை என்றெல்லாம் குறிப்பிட்டுவிட்டு நாம் ஒற்றை ஆட்சி அடிப்படையில் தான் பேச போகின்றோம் என்று கூறுவது அனைத்தையும் பூச்சியத்தால் பெருக்குவதற்கு சமம். 10 இனை 0 ஆல் பெருக்கினாலும் 1000 பூச்சியத்தால் பெருக்கினாலும் அதன் விளைவு பூச்சியம் தான்.
இடைக்கால அறிக்கை மட்டுமல்ல மகிந்த காலத்தில் உருவாக்கப்பட்ட APRC அறிக்கையையும் நிராகரிப்பது பற்றி ஏன் இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட வேண்டும் என்பது பற்றி யாழ் பல்கலைக் கழக சட்ட விரிவுரையாளர் கலாநிதி குருபரன் அவர்கள் போதிய விளக்கம் அளித்த போதும் ஏனைய 5 கட்சிகளும் ஏற்க மறுத்துவிட்டன.
அப்போது குருபரன் அவர்கள் முன்னணியின் கரிசனையை பிரதான ஆவணத்தில் குறிப்பிடாது அடிக் குறிப்பாக இட அனுமதிக்கலாம் என்று கூறிய போதும் அதையும்5 கட்சிகளும் நிராகரித்துவிட்டன.
பின்னர் கை ஒப்பமிடும் பகுதியில் ஒற்றை ஆட்சி அடிப்படையிலான இடைக்கால அறிக்கையை நிராகரிக்கின்றோம் என்பதற்கு அமைவாக ஒப்பமிடுகின்றோம் என்று கேட்டோம் அதற்கும் 5 கட்சிகளும் மறுத்துவிட்டன. முன்னணியை குறித்த விடயத்தை எழுதி கையொப்பம் இட அனுமதிக்குமாறு பல்கலை மாணவர்கள், அங்கிருந்த சுயாதீன குழுவை சேர்ந்த மத குருக்கள் ஆகியோர் மன்றாட்டமாக கேட்டும் மற்றைய 5 கட்சிகளும் நிராகரித்து விட்டன. மாணவர்களின் இறுதி அறிக்கையில் உள்ள 75% மான விடயங்கள் எமது போராட்டத்தால் உள்வாங்கப்பட்டவை. எமது கோரிக்கை ஏற்கப்படின் எனியும் நாம் கையொப்பம்
இட முடியும்.
இடைக்கால அறிக்கையை நிராகரிக்கின்றோம் என்று கூறியவர்கள் அந்த விடயம் மாணவர்களின் அறிக்கையில் இடம் பெற கூடாது என ஒற்றை காலில் நின்ற மர்மம் பின்னணி நியாயப்பாடு எமக்கு புரியவில்லை.
இந் நிலையில் இடைக்கால அறிக்கையை நாம் நிராகரிக்கவில்லை அதன் அடிப்படையில் தான் எதிர்காலத்தில் பேச போகின்றோம் என்பவர்களை விட அதை நிராகரிக்கின்றோம் ஆனால் அதை எழுதி கையொப்பமிட மாட்டோம் என்ற பிரகிருதைகள் தான் ஆபத்தான பேர்வழிகள்.
ஒற்றை ஆட்சி அடிப்படையிலான இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதாக சொல்பவர்கள் குறித்த விடயம் மாணவர்களின் அறிக்கையில் உள்வாங்கப்பட வேண்டும் என்ற அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.
- விஸ்வலிங்கம் மணிவண்ணன்
தேசிய அமைப்பாளர்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை