இளவரசர் வில்லியம் காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு அழுத்தம்!!

பாகிஸ்தான் விஜயத்தின் ஒருபகுதியாக உருகும் பனிப்பாறைக்கு விஜயம் செய்த இளவரசர் வில்லியம் காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க மேலதிகக் கல்வி மற்றும் அரசியல் நடவடிக்கை தேவை என தெரிவித்துள்ளார்.


இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேற் ஆகியோரின் அரச சுற்றுப்பயணத்தின் மூன்றாம் நாளான இன்று பாகிஸ்தானின் வடக்கில் அமைந்துள்ள தொலைதூர மலைப் பகுதிக்கு இருவரும் விஜயம் செய்துள்ளனர்.

புவி வெப்பமடைதல் காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் சியாடிபோ பனிப்பாறை எவ்வாறு வேகமாக உருகியது என்பது அரச தம்பதியினருக்கு இந்த விஜயத்தின்போது காண்பிக்கப்பட்டது.

மாற்றங்கள் காரணமாக அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு காலநிலை மாற்றம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவை என்று இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் காலநிலை மாற்றம் குறித்த விடயங்களில் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள் எனவும் பிரச்சினையைச் சுற்றி மேலதிகக் கலந்துரையாடல்கள் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள இந்து குஷ் மலைத்தொடருக்கு அரச தம்பதியினர் ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். பனிப்பாறைக்கான பயணத்தைத் தொடர்ந்து, இவர்கள் புவி வெப்பமடைதலால் பாதிக்கப்பட்ட சமூகங்களைச் சந்திக்க அப்பகுதியில் தங்கியிருப்பார்கள்.

காலநிலை மாற்றம் தொடர்பாக “வரவிருக்கும் உலகளாவிய பேரழிவைத் தடுக்க பிரித்தானியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயலாற்ற வேண்டுமென செவ்வாய்க்கிழமை மாலை ஒரு உரையில் இளவரசர் வில்லியம் வலியுறுத்தினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.