இயற்கை எழில்....கவிதை!!
சிற்றிதழில் பனித்துளிகள்
சில்மிஷமாய் கடைவிரித்து
தலை அசைக்கும் அழகிற்கு
ஈடில்லை உலகினிலே.
பொங்கிவரும் கடலலையில்
புகுந்திருக்கும் கவிதை நயம்
இன்னதென்று சொல்லிவிட
ஏதுமிங்கு வார்த்தையில்லை.
மரக்கிளையின் மஞ்சத்தில்
மணிக்குருவி இசைக்கின்ற
மெல்லிசையின் ரசனையினை
வென்றுவிட்ட வித்துவான் யார்?
பாவை அவள் நயனம்
பகிர்கின்ற வார்த்தைக்கு
பதில் கூறும் அகராதி
பாரினில் ஏதுமுண்டோ?
மயங்கும் ஒரு மாலையிலே
பொட்டுவைத்த மேகமங்கை
நாணுகின்ற பேரழகு
நானிலத்தில் வேறு ஏது?
அசைகின்ற காற்றலையும்
இசைக்கின்ற கீதமதை
அளக்கின்ற கருவி ஏதும்
அவனியிலே இல்லையென்பேன்.
மண்ணைத் தழுவுகிற
மழைத்துளியின் காதலினை
எண்ணத்தில் விஞ்சிவிடும்
காதலனும் பாரிலில்லை.
இயற்கையின் அருங்கொடையை
ரசித்துவிடக் கற்றுவிட்டால்
இதயமும் பலமடையும்
இறைமையும் அதில் தெரியும்........
கோபிகை
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
சில்மிஷமாய் கடைவிரித்து
தலை அசைக்கும் அழகிற்கு
ஈடில்லை உலகினிலே.
பொங்கிவரும் கடலலையில்
புகுந்திருக்கும் கவிதை நயம்
இன்னதென்று சொல்லிவிட
ஏதுமிங்கு வார்த்தையில்லை.
மரக்கிளையின் மஞ்சத்தில்
மணிக்குருவி இசைக்கின்ற
மெல்லிசையின் ரசனையினை
வென்றுவிட்ட வித்துவான் யார்?
பாவை அவள் நயனம்
பகிர்கின்ற வார்த்தைக்கு
பதில் கூறும் அகராதி
பாரினில் ஏதுமுண்டோ?
மயங்கும் ஒரு மாலையிலே
பொட்டுவைத்த மேகமங்கை
நாணுகின்ற பேரழகு
நானிலத்தில் வேறு ஏது?
அசைகின்ற காற்றலையும்
இசைக்கின்ற கீதமதை
அளக்கின்ற கருவி ஏதும்
அவனியிலே இல்லையென்பேன்.
மண்ணைத் தழுவுகிற
மழைத்துளியின் காதலினை
எண்ணத்தில் விஞ்சிவிடும்
காதலனும் பாரிலில்லை.
இயற்கையின் அருங்கொடையை
ரசித்துவிடக் கற்றுவிட்டால்
இதயமும் பலமடையும்
இறைமையும் அதில் தெரியும்........
கோபிகை
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை