குர்துகளுக்கு இப்போது என்ன நடக்கிறது என்பதை எவரும் புரிந்து கொள்ள,வரலாற்றுப் பாடம்!!

குர்துகளுக்கு இப்போது என்ன நடக்கிறது என்பதை எவரும் புரிந்து கொள்ள, அனைவருக்குமான ஒரு சிறிய (எளிமைப்படுத்தப்பட்ட) வரலாற்றுப் பாடம் இங்கே

குர்துகள் அவர்கள்தம் வீடென்று அழைக்கும் நிலத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். முதல் உலகப்போர் மற்றும் ஒட்டோமான்() பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, பிரிட்டிஷ் மற்றும் பிரஞ்சு, குர்துகளுக்கு ஓர் உறுதியளித்தனர். குர்திஸ்தான் என்று அழைக்கப்படும் ஒரு நாட்டை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், அப்பகுதியில்  குர்துகள் தொடர்ந்து அமைதியாக வாழ முடியும் என்பதே அந்த வாக்குறுதி. ஆனால் அவர்கள் அந்த வாக்குறுதியை மீறி ஈரான், ஈராக், துருக்கி மற்றும் சிரியாவை
உருவாக்கியதன் மூலம் குர்திஷ் தாயகத்தை நான்காகப் பிரித்தனர்.
அந்த நான்கு நாடுகளும் அன்றிலிருந்து தங்கள் குர்திஷ் மக்களை துன்புறுத்தியுள்ளன. துருக்கி மிக மோசமான அட்டூழியங்களை அந்த நேரத்தில் செய்துள்ளது, அண்மை வரை குர்திஷ் மொழி, குர்திஷ் பெயர்கள் மற்றும் பலவற்றை  தடை செய்தது. துருக்கி அம்மக்களை குர்துகள் என்றே அழைக்க மறுக்கிறது, மேலும் அவர்களை "மவுண்டன் டர்க்ஸ்" என்று குறிப்பிடுகிறது – அது குர்திஷ் மக்களை காட்டுமிராண்டித்தனமான மற்றும் படிக்காதவர்கள் என்று முத்திரை குத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு

இகழ்க்குறிப்பு.
ஆயிரக்கணக்கான குர்துகள்  80 மற்றும் 90 களில் துருக்கிய ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக போராடியபோது தங்கள் உயிர்களை இழந்தனர், ஆனாலும் குர்துகளின் நிலைமை மேம்படவில்லை.
ஈராக் மீதான 2003 படையெடுப்பை நினைவுபடுத்திப் பார்ப்போம்.
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் ஈராக் மீது படையெடுத்தபோது, ​​குர்துகள் நட்பு நாடுகளுடன் இணைந்து, சதாமின் இராணுவத்திற்கு எதிராக போராடினர்.  அதனால் அவர்கள் ஈராக்கில் ஒரு தன்னாட்சி பிராந்தியத்தை உருவாக்க முடிந்தது. ஐ.எஸ்.ஐ.எஸ் ஈராக்கில் ஏராளமான நிலங்களை அபகரிக்கத் தொடங்கியபோது, ​​குர்துகள்தம் கூட்டணி உதவியுடன் போராடிஅவற்றை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் சிரியாவில் நிலம் எடுத்து ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்லத் தொடங்கியபோது, ​​சிரிய ஜனாதிபதி அசாத் தனது இராணுவத்தை இப்பகுதியை விட்டு வெளியேறும்படி கட்டளையிட்டார், மேலும் அவர் மில்லியன் கணக்கான குர்துகளை அங்கேயே விட்டுவிட்டார். ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை பின்னுக்குத் தள்ளவும், தங்கள் தாயகத்தில் மற்றொரு தன்னாட்சி பிராந்தியத்தை செதுக்கவும்  கூட்டணி வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஆயுதங்களின் உதவி இல்லாமலே அவர்கள்  போரிட்டு வென்றனர்.
அந்த பகுதியே ரொஜாவா. தொழிலாளர்கள் உரிமைகள், சமத்துவம், பெண்ணியம் மற்றும் சூழலியல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக கூட்டமைப்பு என்ற அமைப்பின் கீழ் அங்குள்ள மக்கள் வாழ்கின்றனர். கொள்கையளவில், ஜனநாயகத்தின் இந்த வடிவம் இன்று ஒரு மேற்கத்திய நாட்டில் பயன்படுத்தப்படும் எந்தவொரு அமைப்பையும் விட மிகவும் ஜனநாயகமானது.
சிரியாவில் அமெரிக்காவுடன் குர்துகள் அணிசேர விரும்பவில்லை, அவர்கள் இறக்க விரும்பவில்லை, அசாத்தால் கைவிடப்பட்ட பின்னர் அவர்களுக்கு வேறு வழியில்லை.
இப்போது அமெரிக்கா குர்துகளை கைவிட்டு, அவர்களை சாவுக்கு கையளித்துவிட்ட்து. அவர்கள் இனிஅமெரிக்காவுக்குப் "பயனுள்ளவர்கள்" அல்ல, எனவே சொர்க்கத்திற்கு தடைசெய்யப்பட்டவர்கள். அமெரிக்கா சர்வதேச வங்கிச் சட்டத்திற்கு தலைவணங்காத மக்களுக்கு இனியும் உதவப் போவதாகத் தெரியவில்லை. எனவே அவர்கள் உண்மையான ஜனநாயகத்தில் வாழ உறுதியாக உள்ளனர்.
அமெரிக்கா மத்திய கிழக்கிற்கு "ஜனநாயகம்" கொண்டுவர விரும்புவதாக கூறியது, ஆனால்அது  ’அந்த’ வகையான ஜனநாயகம் அல்ல.
அசாதும் ரஷ்யாவும் இப்போது குர்துகளை ஆதரிக்க மறுக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் கொலையாவதற்கு பதிலாக அமெரிக்காவுடன் இணைந்து கொண்டனர். மேலும்  துருக்கி (குர்திஷ் மக்களின் மிகப்பெரிய அடக்குமுறையாளர், மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுக்கு உண்மையில் நிதியளித்த நாடு) இன அழிப்பு, இனப்படுகொலை மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் கைதிகளை விடுவிக்கும் நோக்கத்துடன் நேட்டோவின் மிகப்பெரிய படைகளில் ஒன்றுடன் குர்துகளின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது.
குர்திஷ் மக்களால் வெற்றி பெற முடியாது. ஒவ்வொரு பெரிய உலகளாவிய சக்தியும் அவற்றின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு அவர்களைப் பயன்படுத்திப் பின் அவர்களை ஓநாய்களுக்கு உணவாக்குகின்றன.
குர்துகளுக்கு அமெரிக்கா துணை நிற்காது. சிரிய அரசாங்கம் அவர்களுக்கு ஆதரவாக நிற்காது, ஈரானோ ரஷ்யாவோ ஆதரவு தராது. அதனால்தான் இதைப் படிக்கும் இதயமுள்ள ஒவ்வொரு நபரும் இப்போது குரல் எழுப்ப வேண்டும்!
ஒரு பழைய குர்திஷ் பழமொழி உள்ளது:
"நண்பர்களென யாருமில்லை, மலைகளே துணை.
அது உண்மை இல்லை என்று உங்கள் குர்திஷ் சகோதர சகோதரிகளுக்குக் காட்டுங்கள். உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள். நான் உங்களை வேண்டுகிறேன்.

ரொஜாவாவுக்காக எழுவோம்
-ஆதி எம்எல்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.