பொப்பி நாள் நிகழ்வும் நினைவுகூரலும்!!
செந்நிறப் பொப்பி நாள் நினைவுகூரல் நிகழ்வானது இந்த ஆண்டு, போரினாலும் பயங்கரவாதத் தாக்குதல்களாலும் உயிரிழந்த பொதுமக்களையும் நினைவுகூரும் வகையில் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோயல் பிரிட்டிஷ் லீஜன் (Royal British Legion) இது குறித்துக் கூறுகையில்; நினைவுச் சின்னத்தின் வரையறையை மற்றும் அதன் அர்த்தத்தை தாம் புதுப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
போரில் போராடியவர்களை நினைவு கொள்வதற்காக பாரம்பரியமாக செந்நிறப் பொப்பிகள் அணியப்படுகின்றன.
நினைவுகூரல் என்பது நம்பிக்கையின் சின்னமாகும். இதனை மதம் அல்லது அரசியலின் அடையாளமாகப் பார்க்கக்கூடாது என்று ரோயல் பிரிட்டிஷ் லீஜன் கூறுகின்றது.
2017 ஆம் ஆண்டு மன்செஸ்ரர் அரினா தாக்குதல் போன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்தும் பொப்பி மலர் நிகழ்வு இம்முறை இடம்பெறவுள்ளது.
ரோயல் பிரிட்டிஷ் லீஜன் அறக்கட்டளையானது 1912 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து போரினால் பாதிப்புக்குள்ளானவர்களை நினைவுகூர்ந்து வருகின்றது என்று ரோயல் பிரிட்டிஷ் லீஜனின் உதவி இயக்குநர் ரொபேர்ட் லீ தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாம் எங்களது முக்கிய நிலைப்பாட்டை மாற்றவில்லை. எனினும் நினைவுகூரலானது அனைத்து நவீன பிரிட்டனையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொப்பி நாள் நினைவுகூரல் என்பது ஆயுதப்படை சமூகத்துடன் தொடர்புடையது. எனினும் பிரத்தியேகமாக அதற்கானது மட்டுமல்ல என்று ரோயல் பிரிட்டிஷ் லீஜன் அறக்கட்டளையின் இணையத் தளம் முன்னரே கூறியிருந்தது.
பொப்பி நாள் நினைவுகூரலானது பிரித்தானியா மற்றும் கொமன்வெல்த் நாடுகளின் ஆயுதப்படைகளின் தியாகத்தை நினைவுபடுத்துகிறது.
எனினும் போரினாலும் பயங்கரவாதத் தாக்குதல்களாலும் உயிரிழந்த பொதுமக்களையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில் பொப்பி நாள் நிகழ்வுகள் அமையவுள்ளன.
போரில் சண்டையிட்டவர்களை நினைவுகொள்ள 1921 ஆம் ஆண்டு முதல் செந்நிறப் பொப்பிகள் ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த மலர் தெரிவு செய்யப்பட்டதற்கு காரணம் வடக்கு பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தின் பல வயல்களில் பொப்பி மலர்கள் காடாக வளர்கின்றன. அவ்வாறான வயல்களிலேயே முதலாம் உலகப் போரின் மிகக் கொடிய போர்கள் நடைபெற்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை