சுசி கணேசனின் அடுத்த கிரைம் திரில்லர்!


திருட்டு பயலே, கந்தசாமி, திருட்டு பயலே 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்தியில் புதிய படமொன்றை இயக்கவுள்ளார் சுசி கணேசன்.


பிரசன்னா, கனிகா நடித்த ஃபைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் சுசி கணேசன், மணிரத்னமின் உதவி இயக்குநராவார். ஃபைவ் ஸ்டார் படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு பின், பிரசாந்த்-சினேகா நடிப்பில் இவர் இயக்கிய விரும்புகிறேன் நல்ல படம் என பெயரெடுத்தாலும் வசூல் ரீதியாக கைகொடுக்க வில்லை. 2006ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான திருட்டு பயலே, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு பின் விக்ரம் நடிப்பில் கந்தசாமி, திருட்டு பயலே இந்தி ரீமேக்கான ஷார்ட் கட் ரோமியோ ஆகிய படங்கள் ரசிகர்களிடம் போதுமான வரவேற்பை பெறவில்லை.
2017ஆம் ஆண்டு திருட்டு பயலே 2 படத்தை பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால் நடிப்பில் உருவாக்கினார் சுசி கணேசன். நீண்ட நாட்களுக்கு பின் இப்படம் அவருக்கு கைகொடுத்தது எனலாம். இந்நிலையில், சுசி கணேசன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். மீண்டும் கிரைம் திரில்லரோடு வந்திருக்கும் சுசி, இம்முறை பாலிவுட்டில் கதை சொல்லவிருக்கிறார்.
பாம்பே டாக்கீஸ், கேங்க்ஸ் ஆஃப் வசிபூர் போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் வினீத் குமார் சிங். சமீபத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் கவனத்தை ஈர்த்து வரும் ’பார்ட் ஆஃப் பிளட்’ தொடரில் இவரது நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகின்ற நிலையில், இயக்குநர் சுசி கணேசன் தனது நாயகனாக தேர்வு செய்திருக்கிறார். வினீத் சிங் சுசி கணேசனின் கதையை கேட்ட பின், உடனடியாக படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
தீபாவளிக்குப் பின் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. வாரனாசி, லக்னோ ஆகிய பகுதிகளில் இப்படம் படமாகவுள்ளது. மேலும் இப்படத்தின் நாயகி, முக்கிய நடிகர்கள், படக்குழு உள்ளிட்ட தகவல்கள் இனி வரும் நாட்களில் அதிகாரபூர்வமாக வெளியாகவுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.