பிரதமர் ரணில், அமைச்சர் தயாகமகே - ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு உத்தரவு!

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவில் நாளை 18ஆம் திகதி ஆஜராகுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் தயா கமகேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


மத்தள சர்வதேச விமான நிலையத்தில் நெல்லைக் களஞ்சியப்படுத்தியமையால் அரசுக்கு ஏற்பட்ட நட்டம் தொடர்பில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் எம்.பண்டார திசாநாயக்க, மத்தள விமான நிலைய முகாமையாளர் நளின் உபுல் கலன்சூரிய ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி வழங்கியுள்ள சாட்சியங்களின் பிரகாரம் மேலதிக விசாரணைகளுக்காக பிரதமர் மற்றும் அமைச்சர் தயா கமகேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் கட்டளைச் சட்டத்தின் 16ஆவது பிரிவின் கீழ் ஆஜராகி தமது பக்க நியாயங்களை தெரிவிக்குமாறு இருவருக்கும் ஆணைக்குழுவால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதமரின் ஆலோசகர் சரித்த ரத்வத்தே மற்றும் முன்னாள் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அஜித் டயஸ் ஆகியோருக்கு இன்று (17) ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுப்பிரணியம் நிஷாந்தன்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.