சசிகலாவை அதிமுகவில் சேர்க்கமாட்டோம்: அமைச்சர்!!

அதிமுகவில் சசிகலா இணைவது தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் தினகரன், அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிறையில் இருக்கும் சசிகலா வெளியே வந்ததும் அதிமுகவில் சேருவாரா அல்லது அமமுகவில் சேருவாரா என்று அதிமுக நிர்வாகிகளுக்கு மத்தியில் நடந்துகொண்டிருந்த வாதம் தற்போது, தலைவர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில் சசிகலா அதிமுகவில் சேருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘இதுபற்றி தலைமைக் கழகம் ஆலோசித்து பேசி நல்ல முடிவெடுக்கும்’ என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் சொல்லியிருந்தார்.

இதற்கிடையே சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் சசிகலா. அவர் வேறு கட்சிக்கெல்லாம் செல்லமாட்டார். தெய்வத்தின் முன்பு சசிகலா நிரபராதி. அவர் சிறையிலிருந்து வெளிவர வேண்டும் என்பதே எனது ஆசை. எனது மனசாட்சியின் கருத்தும் அதுதான்” என்று தெரிவித்தார்.
 எடப்பாடி கட்சிக்குள் ஒரு எதேச்சதிகார முதல்வராக உருவாகிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு ஆதரவாக கொங்கு மண்டலத்தை சேர்ந்த 6 அமைச்சர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள். சசிகலா கட்சிக்குள் வருவது பற்றி பன்னீர் பேச ஆரம்பித்ததும் ராஜேந்திர பாலாஜி உட்பட பல அமைச்சர்கள் வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள். மொத்த அமைச்சர்களில் எடப்பாடிக்கு நெருக்கமான கொங்கு அமைச்சர்களை தவிர மற்ற அனைவரும் சசிகலாவின் வரவை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்கிறார் பன்னீர் தரப்பைச் சேர்ந்த அந்த சீனியர்” என்று தெரிவித்திருந்தோம்.
https://www.tamilarul.net/
அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டோம்
இந்த நிலையில் சசிகலா அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டார் என்று அதிமுகவின் குரலாக ஒலிக்கும் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நாங்குநேரியில் இன்று (அக்டோபர் 16) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “அது ராஜேந்திர பாலாஜியின் கருத்தாக இருக்கலாம். அவருக்கு சசிகலா பிடித்தமானவராகவும் இருக்கலாம். ஆனால், அதில் எனக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரை ஒரே முடிவுதான். சசிகலா, தினகரன் உள்பட அவரைச் சார்ந்தோர்களை அதிமுகவில் சேர்த்துக்கொள்வதில்லை, ஆட்சியிலும் அவர்களுக்கு எவ்வித பங்கும் இல்லை என்று கட்சியில் ஒருமித்த கருத்தின்படி முடிவு எடுத்துள்ளோம். தனிப்பட்ட முறையில் யாரும் எடுக்கவில்லை. கட்சியில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதே நிலைதான் எதிர்காலத்திலும் தொடரும்” என்று பதிலளித்தார்.
அதிமுகவில் சேரமாட்டோம்
தாங்கள் அதிமுகவில் இணையமாட்டோம் என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “வேடிக்கையாக பேசுகிறவர்களின் கேள்விக்கெல்லாம் என்னிடம் பதில் கேட்டு நேரத்தை வீணடிக்காதீர்கள். துரோகம் செய்தவர்களுடன் நாங்கள் இணைவதற்கு வாய்ப்பே கிடையாது என பலமுறை கூறிவிட்டேன். சசிகலா சிறையில் இருப்பதால் இவர்கள் வாய்க்கு வந்தபடி பேசிவருகிறார்கள். அதிமுகவில் உள்ள ஒருசில துரோகிகளை நீக்கிவிட்டு மற்றவர்கள் எங்களுடன் இணைவார்கள்” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.