பிகில் வியாபாரம்: பின் விளைவுகள்!

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் வியாபார விவரங்கள் வெளியாகியிருக்கிறது.

பிகில் மூலம், முதல்முறையாக விஜய் நடித்துள்ள படம், 200 கோடி ரூபாய் வியாபாரத்தை கடந்துள்ளது. இதுவரை இந்திய சினிமாவில் இந்திப் படங்கள் மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. மாநில மொழி திரைப்படங்கள் 100 கோடி ரூபாய் வியாபாரத்தை கடப்பது சாதனை நிகழ்வாக இருந்து வந்தது. அதனை முறியடித்து 100 கோடி ரூபாய்க்கும் மேல் வியாபாரம் செய்யப்பட்ட படம் ரஜினிகாந்த் நடித்து வெளியான எந்திரன்.
அதற்குப் பின்னால், ரஜினி நடித்த கபாலி, எந்திரன் -2 , காலா, பேட்டை என அனைத்து படங்களும் 100 கோடி ரூபாய் வியாபாரத்தை எளிதாக கடந்து, 200 கோடி ரூபாய்க்கு மேல் ஒரு மாநில மொழி படம் வியாபாரம் ஆகும் என்பதை இந்திய சினிமாவில் நிரூபித்தது.
எந்திரன் படத்தை தவிர்த்து மற்ற படங்கள் அனைத்தும் வெளிநாடுகளில் வசூல் ரீதியாக சாதனை நிகழ்த்தியது. தமிழகத்தில் எந்திரன் அளவுக்கு அதற்குப் பின்னால் ரஜினி நடிப்பில் வந்த எந்த திரைப்படமும் தமிழகத்தில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை நிகழ்த்தவில்லை.
ஆனால் விஜய் நடிப்பில் வெளியான தெறி, மெர்சல், சர்க்கார் ஆகிய படங்கள் ரஜினி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை தமிழகத்தில் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தில் இன்று வரை இருந்து வருகிறது. அதற்குக் காரணம் விஜய் நடிக்கும் படங்கள் தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டுமே ரிலீஸ் செய்யப்படுகிறது. பண்டிகை காலமென்பதால் மக்கள் மத்தியில் பணப்புழக்கமும், புதிய படங்கள் பார்க்க வேண்டுமென்ற ஆவலும் இருப்பது ஒரு காரணம். சாதாரண நாட்களை விட தீபாவளி பண்டிகை காலங்களில் அதிகமான விலைக்கு டிக்கெட் வாங்குவதற்கு ரசிகர் மத்தியில் வேகமும் ஆர்வமும் இருப்பதும் மற்றொரு காரணம் எனலாம்.
முதல் முறையாக விஜய்யின் திரையுலக வரலாற்றில், பிகில் திரைப்படம், இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தின் ஏரியா உரிமைகளும் வெளிநாட்டு விநியோக உரிமை, தொலைக்காட்சி டிஜிட்டல் உரிமைகள் வியாபாரம் ஆகியுள்ளது.
அதேவேளையில் கேரளாவில் மலையாள முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வசூலுக்கு இணையாக விஜய் படங்களின் வசூல் இருக்கும். அதனால் கேரள உரிமை அதிக விலைக்கு வாங்குவதற்கு கடுமையான போட்டி இருக்கும். மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வேற்று மொழி திரைப்படங்களை 125 தியேட்டர்களுக்கு மேல் ரீலீஸ் செய்யக்கூடாது என்று புதிய கட்டுப்பாட்டை கொண்டு வந்திருப்பதால், தொடக்கத்திலேயே விஜய்யின் படங்களை அதிக விலைக்கு விற்பது தடைபட்டு விநியோக முறைக்கு மாறியுள்ளது.
பிகில் திரைப்படத்தை தயாரித்திருக்கும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி 185 கோடி ரூபாய் செலவில் விஜய் நடிப்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் முதல் திரைப்படம் பிகில்.
இதற்கு முன்னால் ரஜினி நடித்த எந்திரன் படத்திற்கு 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டது. எந்திரன் 2 படத்திற்கு 500 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
பிகில் திரைப்படம் தமிழக உரிமை 73 கோடி ரூபாய்க்கும், வெளிநாட்டு உரிமை 28 கோடி ரூபாய், தொலைக்காட்சி டிஜிட்டல் உரிமை 52 கோடி ரூபாய், கேரளா கர்நாடகா உரிமை 14 கோடி ரூபாய், இந்தி டப்பிங் உரிமை 23 கோடி ரூபாய், தெலுங்கு உரிமை 8 கோடி ரூபாய், ஆடியோ உரிமை மூன்று கோடி ரூபாய் ஆக மொத்தம் 201 கோடி ரூபாய்க்கு பிகில் திரைப்படம் வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.
இது முழுக்க முழுக்க அவுட் ரேட் முறையில் வியாபாரம் செய்யப்பட்டுள்ளதால் திரைப்படம் வெற்றி பெற்று மிகப்பெரிய வசூல் செய்தாலும்கூட அதன் மூலம்தயாரிப்பாளருக்கு கூடுதல் வருவாய் என்பது கிடைக்காது. அதேநேரம் வாங்கிய விலைக்கு படம் வசூல் செய்யவில்லை நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்று கூறி தயாரிப்பாளரிடம் நஷ்ட தொகை கேட்கவும் முடியாது.
185 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட பிகில் படம் வியாபாரம் மூலமாக தயாரிப்பாளருக்கு கிடைத்திருக்கும் கூடுதல் தொகை 16 கோடி ரூபாய் மட்டுமே. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் படத்தயாரிப்புகாக செய்த முதலீடு 185 கோடி ரூபாய். குறைந்தபட்ச வங்கி வட்டி கணக்கு அடிப்படையில் பார்க்கிறபோது தயாரிப்பாளருக்கு விஜய் நடித்த பிரம்மாண்டமான பட்ஜெட் படத்தை தயாரித்தோம் என்கிற கௌரவம் மட்டுமே எஞ்சி நிற்கிறது.
போட்ட முதலீட்டு அடிப்படையில் 15சதவீத லாபம் கிடைக்கவேண்டும். அந்த அடிப்படையில் சுமார் 25 கோடி ரூபாய் நிகர லாபமாக தயாரிப்பு நிறுவனத்திற்கு கிடைத்திருக்க வேண்டும். பிகில் திரைப்படத்தை பொருத்தவரை அது கிடைக்கவில்லை. போட்ட முதலீட்டிற்கு வட்டி மட்டும் கிடைத்துள்ளது என்பதே எதார்த்தமான உண்மை.
தமிழ் சினிமா தயாரிப்பில் தொடர்ச்சியாக கதாநாயகன், இயக்குநர் இவர்கள் மட்டுமே மிகப்பெரிய லாபத்தை முதலீடு இல்லாமல் வருவாயாக பெற்றுவருகின்றனர். தயாரிப்பாளர்களை பொருத்தவரை குறைந்தபட்ச லாபம் அல்லது அதிகபட்ச நஷ்டத்தையே சந்திக்க வேண்டியிருக்கிறது. பிகில் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் வெற்றி பெறும் பட்சத்தில் நடிகர் விஜய், இயக்குநர் அட்லி என இருவரும் அடுத்த படத்திற்கு சம்பளத்தை அதிகரித்துக்கொள்வார்கள்.
தமிழக விநியோக உரிமையை 73 கோடி ரூபாய்க்கு ஸ்கிரீன் சென் நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது விநியோக பகுதி உரிமைகளை அவுட் ரேட் விநியோக அடிப்படையில் வியாபாரம் செய்துள்ளது.
அது பற்றிய தகவல்கள்..73 கோடி ரூபாய் முதலீடு மீண்டும் கிடைக்க தமிழகத்தில் எவ்வளவு வசூல் ஆக வேண்டும்? நாளை 1 மணி பதிப்பில்..
இராமானுஜம்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.