எடப்பாடிக்கு டாக்டர் பட்டம்: பிரேமலதா கிண்டல்!


முதல்வருக்கு டாக்டர் பட்டம் அளிப்பது தொடர்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார்.

நிகர்நிலை பல்கலைக்கழகமான டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28வது பட்டமளிப்பு விழா சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வரும் 20ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவுக்கு பல்கலைக் கழகத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமை தாங்குகிறார். இந்நிகழ்வில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்குகிறார். அப்போது, முதல்வருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் இன்று (அக்டோபர் 17)கருத்து தெரிவித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “டாக்டர் பட்டம்தான் தற்போது மலிவாக அனைவரும் வாங்கி வருகிறார்களே? அனைவரும் வாங்குவதால் முதல்வருக்கு வழங்கப்படுவதில் எந்தத் தவறும் இல்லை. தமிழகத்தின் முதல்வராக அவர் இருந்துவருகிறார். சாதாரண ஆட்களுக்கே டாக்டர் பட்டம் வழங்கப்படும் நிலையில், முதல்வருக்கு வழங்குவதெல்லாம் பெரிய விஷயம் கிடையாது” என்று தெரிவித்தார்.
சீமான் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த அவர், “பிரச்சார நேரத்தில் மறைந்த தலைவர்கள் பற்றி அனைவரும் பேசுவது வழக்கமானதுதான். இதுபோன்றுதான் கமலும் பேசிவருகிறார். சீமான் கருத்து ஏற்கமுடியாத ஒன்று. இருந்தாலும் அவருடைய கட்சியை தடை செய்ய வேண்டும் என்று சொன்னால் அனைத்து கட்சிகளையும்தான் தடை செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
முன்னதாக நாங்குநேரியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரேமலதா, “இடைத்தேர்தலில் மக்கள் திமுகவுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் நடக்காமல் இருப்பதற்கு திமுக தான் காரணம்” என்றும் சாடினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.