அச்சாறு செய்வது எப்படி!!

தேவையானவை :



சின்ன வெங்காயம்  - 20

பச்சை மிளகாய் - 15 (கீறியது)

கரட் - 2  (மெலிய சீவலாக நறுக்கியது)

வினாகிரி - 2 கப்

கடுகு - 2 டீஸ்பூன் (அரைத்தது)

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் - சிறிதளவு

உப்பு - தேவைகேற்ப



செய்முறை :
1.முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் வினாகிரியை ஊற்றி சூடாக்கிக் கொள்ளுங்கள். அதனுள் வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் குறைவான தீயில் வேகவைக்கவும். பின்னர் வெங்காயத்தை வெளியே எடுத்து விட்டு மிளகாயைப் போட்டு அதேபோல் மிதமான தீயில் வேகவைத்துக் கொள்ளவும்.இதேபோல் கரட்டையும் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

2.பாத்திரத்தில் சூடாக இருக்கும் வினாகிரியில் மீதம் உள்ள வினாகிரியை விட்டு அதனுள் அரைத்தை கடுகு, மிளகுத்தூள், மஞ்சள், உப்பு, ஆகியவற்றை கலந்து சிறிது நேரம் கொதிக்க விடவும். கொதித்த வினாகிரியை, ஏற்கனவே வினாகிரியில் சூடாக்கி எடுத்து வைத்திருக்கும் காய்கறியில் ஊற்றி ஒரு போத்தலில் போட்டு மூடி வைக்கவும்.இரண்டு நாட்களின் பின்னர் பாத்திரத்தின் மூடியைத் திறந்து பார்த்து. சாப்பிடுவதற்கு பரிமாறவும்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.