தொடரும் இலங்கை மின்சார சபையின் அசமந்த போக்கு!!

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் அம்மன் வீதி, கந்தபுராண வீதி, அன்னசந்திர வீதி, பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கை, மணிக்கூட்டு கோபுர வீதி, நாவலர் வீதி போன்ற முக்கியமான போக்குவரத்து கூடிய வீதிகளில் இலங்கை மின்சார சபையின் பாராமரிப்பில் உள்ள வீதி மின்விளக்குகள் கடந்த நான்கு நாட்களாக ஒளிரவில்லை. குறித்த பகுதிகள் அனைத்தும் கடும் இருளில் மூழ்கி உள்ளன. அன்ன சந்திர வீதியில் மின் விளக்குகள் ஒளிரும் போதே திருடர்கள் அவ் வழியால் செல்பவர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் தொலைபேசிகளை அபகரிக்கின்ற சம்பவங்கள் காணப்படுகின்ற நிலையில் கடந்த நான்கு நாட்களாக இருட்டிருக்கும் நிலையில் எவ்வாறு அச்சுறுத்தல்கள் நடைபெறும்? அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் தான் வாழ்கின்றனர்.
இது தொடர்பில் கடந்த மூன்று நாட்களாக ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் இலங்கை மின்சார சபைக்கு அறிவித்து இந்த நிமிடம் வரை எதுவும் நடைபெறவில்லை.

மின்சாரப்பட்டியலில் 200 ரூபா நிலுவை இருக்கும் போது அதனை கட்டுவதற்கு சிறு நேர அவகாசம் கூட பொதுமக்களுக்கு வழங்காமல் மின் இணைப்பை துண்டித்துவிட்டு செல்லுகின்ற இலங்கை மின்சார சபை பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பிலான இவ் வீதி விளக்குகள் தொடர்பில் ஏன் அசமந்த போக்கை தொடர்ந்து கடைப்பிடிக்கின்றது.

வரதராஜன் பார்த்திபன்
மாநகரசபை உறுப்பினர்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.