இடைநிறுத்தப்பட்டது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரசார கூட்டம்!!

வவுனியா தாலிக்குளம் பகுதியில் இடம்பெறவிருந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரசார கூட்டம் தேர்தல் திணைக்களத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.


தாலிக்குளத்தில் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இன்று (சனின்கிழமை) தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது.

இந்நிலையில், குறித்த கூட்டத்திற்கு வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் இருந்து சென்ற உத்தியோகத்தர்கள் பிரசார கூட்டத்தினை இடைநிறுத்துமாறு தெரிவித்தனர்.

குறித்த பிரசார கூட்டத்திற்கு தேர்தல் திணைக்களத்திடமிருந்து உரிய முறையில் அனுமதி பெறப்படவில்லை என தெரிவித்தே கூட்டம் இடைநிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் மீண்டும் திரும்பிச்சென்றிருந்தனர். இதனால் அங்கு சற்று நேரம் குழப்பநிலை ஏற்பட்டிருந்ததாக  தெரியவருகின்றது!!
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.