கோத்தபாயா தரப்பை ஆதரிக்கும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் , தேசியக் கட்சிகளின் வடக்கு கிழக்கு தமிழ் பிரதிநிதிகளுக்கு ஓர் பகிரமடல்!!

மனச்சாட்சியுடன் பதிலளிப்பீர் களா? கோத்தபாயா 5 தமிழ் கட்சிகளின் 13 கோரிக்கைகளை அடியோடு மறுக்கிறார் பேசவே மாட்டன் என்கிறார் .உங்களுக்கே தெரியும் அதில் நிறைவேற்றப்படக்கூடிய நிறைய விடயங்கள் உள்ளன சில மட்டுமே சிங்கள மக்களின் எதிர்ப்புக்களை சம்பாதிக்க கூடியவை 

மீண்டும் மீண்டும் திமிராக தமிழ் மக்களின் உணர்வுகளை அவர் மதிக்காத வகையில் எம்மை இலங்கையராக சிந்திக்கத் தூண்டாத வகையில் இது சிங்களவர்களின் விருப்புக்களுடன் மட்டும் ஆட்சி செய்யப்பட வேண்டிய நாடு என்ற வகையிலும் நடந்த சம்பவங்களுக்கு எந்த பொறுப்புக் கூறலையும் செய்ய தயாரற்ற நிலையில் பிரச்சாரத்தை முழுக்க இனவாத நோக்கில் செய்வது எவ்வகையில் நியாயமானது? அவருக்கு பிரச்சாரம் செய்யும் விமல் வீரவன்ச போன்றவர்கள் இனவாதத்தை கக்குகின்றனர். ஆட்சிக்கு வந்து பெயர்ப் பலகை மாற்றுவோம் என்கின்றனர்.

இவற்றுக்கெதிராக உங்களால் எதிர்வினையாற்ற முடியுமா? உங்கள் நிலைப்பாடு என்ன

அடிப்படைவாத தமிழ்க் கட்சிகள் கூட இவ்வாறு இனவாதம் பேசவில்லை

மகிந்த இராஜபக்ச தேர்தலில் நின்ற போது இவ்வாறு இனவாதம் கக்கி அவர் வாக்கு கேட்டதை அவதானிக்க முடியவில்லை.

இப்படி பேசிக் கொண்டு மூச்சுக்கு மூச்சு இலங்கையராக எதிர்காலத்தை சிந்திப்பம் என்று எவ்வாறு சொல்ல முடியும்

இந்நிலையில் நாம் தமிழ் மக்கள் ஏன் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்கு நியாயமான ஒரு காரணத்தை உங்கள் மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள்

நீங்கள் இங்கிருந்து பெற்றுக் கொடுக்கும் ஒவ்வொரு வாக்குகளும் எதை ஏற்றுக் கொள்கின்றது என்று தெரியுமா?

இப்படி வெளிப்படையாக இனவாதம் கக்குபவர்கள் எப்படி சுபீட்சமான இலங்கையினை கட்டி எழுப்ப முடியும்?

நீங்கள் அத்தனை பேரும் யாதார்த்தவாதிகள் தானா சொல்லுங்கள்

மற்ற வேட்பாளர்கள் எப்படி என்று கேள்வி கேட்காமல் உங்கள் வேட்பாளர் சொல்பவற்றை நீங்கள் ஏற்கின்றீர்களா என்று சொல்லுங்கள்?

டக்ளஸ் தேவானந்தா கட்சி
வியாளேந்திரன் கட்சி
அங்கஜன் கட்சி
வரதராஜப் பெருமாள் கட்சி
சந்திரகுமார் கட்சி
கருணா கட்சி
பிள்ளையான் கட்சி
ஆறுமுகம் தொண்டமான் கட்சி
பிரபா கணேசன் கட்சி
ஜனநாயக போராளிகள் கட்சி

இவர்களுக்காக கம்பு சுத்துபவர்கள்

உங்களால் பதிலளிக்க முடியுமா?

நான் ஒரு அப்பாவி குடிமகன் இலங்கையனாக இருப்பதற்குரிய சூழ்நிலைகள் இலங்கையில் தோன்ற வேண்டும் என விரும்புகின்றேன். நான் எந்தக் கட்சியின் உறுப்பினரும் இல்லை. மானசீகமாக உரிமைப் போராட்டத்தை நேசித்திருந்தாலும் எந்த ஆயுத இயக்கத்தில் உறுப்பினராக இருந்ததும் இல்லை. நான் வைத்திருக்கும் ஒரே ஆயுதம் "வாக்கு " மட்டுமே. எனவே இந்தக் கேள்விக்காக உங்கள் வேட்பாளர் ஆட்சிக்கு வந்தால் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியம் இருக்காது என நம்பிறன்.

உங்கள் மனச்சாட்சிக்கான சவால்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.