ஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை எதிர்ப்பதற்கு ஈழத் தமிழர்கள் எப்படி துணிந்தார்கள்?

அமெரிக்காவை விரட்டியடித்த வியட்நாமியர்கள் போல்
ரஸ்சியாவை விரட்டியடித்த ஆப்கானிஸ்தானியர் போல்
இந்தியாவை விரட்டியடித்த ஈழத் தமிழர்கள் என்பதும்
உலக வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது.


வியட்நாமிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் பல நாடுகள் உதவி புரிந்தன. ஆனால் எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் ஈழத் தமிழர்கள் இந்திய ராணுவத்தை விரட்டியடித்தனர்.

பலரும் ஆச்சரியத்துடன் எழுப்பும் கேள்வி “இந்த துணிவு ஈழத் தமிழர்களுக்கு எப்படி வந்தது?

ஏனெனில் டாங்கிகள் பீரங்கள் மற்றும் போர் விமானங்களுடன் வந்த ஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்துடன் மோதுவதென்பது தற்கொலைக்கு ஒப்பானதே என்றுதான் எல்லோரும் கருதினார்கள்.

ஏனெனில் அப்போது புலிகள் அமைப்பில் இருந்த உறுபினர்களின் எண்ணிக்கை அண்ணளவாக 1000 பேர்கூட இல்லை.

ஆனாலும் தமிழ் மக்கள் இந்திய ராணுவத்திற்கு எதிரான போராட்டத்திற்கு முழு ஆதரவு வழங்கி வெற்றியை பெற்றார்கள்.

தமிழ் மக்கள் எப்படி இவ்வாறு துணிந்தார்கள் என்பதற்கு விடை காணுவதாயின் ஈழத் தமிழர்களின் வரலாற்றை கொஞ்சம் புரட்டி பார்க்க வேண்டும்.

738 மைல்களுக்கு அப்பால் உள்ள அந்தமான் தீவுகளையும் 227 மைல்களுக்கு அப்பால் உள்ள இலட்ச தீவுகளையும் இந்தியாவுடன் இணைத்த ஆங்கிலேயர்களால் வெறும் 18 மைல்கள் அப்பால் இருந்த இலங்கையை இந்தியாவுடன் ஏன் இணைக்க முடியவில்லை என்பதை அறிய வேண்டும்.

இந்திய சுதந்திரம் பெற்ற அதே காலப் பகுதியில் இலங்கையும் எப்படி சுதந்திரம் பெற்றது என்பதை அறிய வேண்டும். ஏனெனில் அதே காலப்பகுதியில் இலங்கையை விட பெரிய நாடுகள் பல சுதந்திரம் பெறாமல் இருந்தன.

போத்துக்கேயர், ஒல்லாந்தர்கூட 100 வருடங்களுக்கு மேல் இலங்கையை ஏன் வைத்திருக்க முடியவில்லை என்பதையும் அறிய வேண்டும்.

மன்னர் காலங்களில்கூட தென்னிந்தியாவில் இருந்து படை எடுத்து வந்த மன்னர்கள் முழு இலங்கைகையும் ஏன் நீண்ட காலம் கைப்பற்றி வைத்திருக்க முயவில்லை என்பதை அறிய வேண்டும்.

ஈழத் தமிழர்கள் ஏன் தமக்கு தனி ராஜதானிகளை கொண்டிருந்தார்கள் என்பதை அறிய வேண்டும்.

இவற்றில் இருந்து, இலங்கை மக்கள் குறிப்பாக ஈழத் தமிழர்கள் வீரம் செறிந்த போராட்டத்தின் சொந்தக்காரர்கள் என்பதும் அவர்கள் ஒருபோதும் அடிமையாக வீழ்ந்து கிடந்து விடமாட்டார்கள் என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.

இத்தகைய வீர வரலாற்றை கொண்ட ஈழத் தமிழர்கள் இந்திய ராணுவத்தை எதிர்த்து போராட துணிந்தது ஆச்சரியம் இல்லை. மாறாக அவ்வாறு போராட துணியவில்லை என்றால்தான் ஆச்சரியம்.

குறிப்பு- இது கடந்த வருடம் நான் செய்த பதிவாகும். நண்பர்கள் வேண்டுகோளுக்கு அமைய மீள்பதிவு செய்துள்ளேன். 21.10.19 யன்று இந்திய ராணுவத்தால் யாழ் மருத்துவமனையில் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவு தினம் ஆகும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.