யாழில்,இருப்பிடங்களை இழக்கும் அவலநிலையில் யாழ்.குருநகர் மக்கள்!
யாழ்ப்பாணம் குருநகா் பகுதியில் கருவாடு பதனிடும் வாடி அமைக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு வாழ்ந்து வரும் மக்கள் தம் இருப்பிடங்களை இழக்கும் நிலை உருவாகியுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை அழைத்து குறித்த விடயம் தொடர்பில் எடுத்துரைத்துள்ளனர்.
அத்துடன் தமக்கு மாற்று இடம் வழங்குவதற்கு யாழ்.பிரதேச செயலாளரினால் உறுதிமொழி வழங்கப்பட்டதாகவும் கூறிய பிரதேசவாசிகள் அங்கு அமைக்கப்படும் வாடிகள் அங்கு பல வருடங்களாக
வியாபாரம் செய்கின்ற குருநகர் பகுதியை சேர்ந்த பழைய வாடி உரிமையாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் புதிய வாடிகளை வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
இதேவேளை குறித்த இடத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்கள் வரதராஜன் பார்த்திபன், வைத்திலிங்கம் கிருபாகரன், இரத்தினசிங்கம் யனன், சிவகந்தன் தனுசன், ஜெயக்குமார் ராஜிவ்காந், ஜெயசீலன், மகேந்திரன் மயுரன் மற்றும் கட்சி உறுப்பினர்களும் நேரில் சென்று பார்வையிட்டடுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
கருத்துகள் இல்லை