மீண்டும் எம் மனங்களில் உயர்ந்து நிற்கின்றார் ஜஸ்மின் சூக்கா அம்மையார்!
இலங்கையில் வரும் திங்கட்கிழமை கடல்சார் பாதுகாப்பு சர்வதேச மாநாடு
நடைபெறவுள்ள நிலையில் இதில் கலந்துகொள்ளும் சர்வதேச பிரதிநிதிகள்
“இலங்கையில் உள்ள கடற்படையினரின் இரகசிய தடுப்பு முகாம்களில் இடம்பெற்ற
சித்திரவதைகள் குறித்த விசாரணைகளுக்கு இலங்கை கடற்படையினர் ஒத்துழைப்பை
வழங்கவேண்டும் என பகிரங்கமாக வலியுறுத்த வேண்டும்!” என கோரிக்கை
விடுத்திருக்கின்றனர்!
உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

நீதியை நிலை நாட்ட இன்னமும் மனிதம் குரல் கொடுக்கும் என்ற நம்பிக்கையை தமிழர்க்கு இவ்வமைப்பு கொடுத்துள்ளது!
“கடற்படையினரின் புலனாய்வு பிரிவினர் இவ்வாறான சித்திரவதைகளில் ஈடுபட்டவேளை கடற்படையின் புலனாய்வு பிரிவின் இயக்குநராக பணியாற்றிய இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி நிசாந்த உலுகெட்டெனவின் அமர்வை சர்வதேச பிரதிநிதிகள் புறக்கணிக்க வேண்டும்!” எனவும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
“2008- 2009 இல் 11 பேர் இலங்கை கடற்படையின் விசேட புலனாய்வு பிரிவினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை குறித்து இலங்கையின் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்” என தெரிவித்துள்ள உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா, “சிறிலங்கா கடற்படையினர் மேற்கொண்ட குற்றங்களில் இது ஒரு சிறியபகுதியே!” எனவும் சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார்.
“கடற்படையினரின் பல முகாம்களில் இடம்பெற்ற சட்ட விரோதமாக தடுத்துவைத்தல், சித்திரவதைகள், காணாமற்போகச் செய்யப்படுதல் ஆகியவற்றுடன் கடற்படையின் பல தளபதிகளுக்கு தொடர்புள்ளது.
அல்லது அவர்கள் அதனை அறிந்திருந்தனர்!” என தெரிவித்துள்ள ஜஸ்மின் சூக்கா “இவர்கள் குறிப்பிட்ட முகாம்களின் தலைமை அதிகாரிகளாக விளங்கியதுடன் இந்த குற்றங்களில் ஈடுபடுமாறு உத்தரவையும் வழங்கியிருந்தனர்” எனவும் தெரிவித்துள்ளார்.
“சர்வதேச மாநாட்டை நடத்துபவர்களில் ஒருவரான இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி நிசாந்த உலுகெட்டென 2011 முதல் 2013 வரை கடற்படையின் புலனாய்வு பிரிவின் இயக்குநராக இருந்தார்.
2012 நடுப்பகுதி வரை குறிப்பிட்ட முகாமை கடற்படையின் புலனாய்வு பிரிவினர் இயக்கி வந்தனர்!.
புலனாய்வு பிரிவின் இயக்குநர் என்ற அடிப்படையில் இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி நிசாந்த உலுகெட்டென இது குறித்து தெரிந்திருக்க வேண்டும்.
ஆனால் அவர் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார்!” எனவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது!
“இலங்கை கடற்படையினருடன் கடல்சார் பாதுகாப்பு குறித்த பேச்சு வார்த்தைகளுக்காக கொழும்பு செல்லும் உலக நாடுகளின் கடற்படை அதிகாரிகள் சர்வதேச நியாயாதிக்கத்தை கொண்ட சித்திரவதைக்கு எதிரான பிரகடனத்தில் தங்கள் நாடுகள் கைச்சாத்திட்டுள்ளதை மறந்துவிடக் கூடாது !” எனவும் ஜஸ்மின் சூக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சரியான தளத்தில் சரியான காலத்தில் சரியாக தமிழர்க்கு நடந்த அநீதி உள்ளிட்ட சித்திரவதைகளுக்கு எதிராக குரல் கொடுத்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் சாணக்கியமும் துணிச்சலும் உணர்வும் மனிதாபிமானமும் ஏன் எம் தமிழர்களில் பலருக்கு இல்லை என வேதனை எழுகிறது!
ஈழத்தமிழர்கள் போற்ற வேண்டிய தேவதைகளில் ஜஸ்மின் சூக்கா அம்மையாரும் ஒருவர்!
அவரது பாதுகாப்பு குறித்து அக்கறை எடுப்பதும் அவரின் கண்டனங்களுக்கான வலுச்சேர்ப்பு பரப்புரைப் பணியை சரவதேச மனித உரிமை அமைப்புகளூடாக எடுத்துச் செல்வதும் தமிழரின் கடன் மட்டுமல்ல மனிதம் உள்ள மனிதர்களின் கடனுமாகும்!
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை