ரோகித் சர்மா இரட்டை சதம்.!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்துள்ளார்.
இரு அணிகளும் மோதும் 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. 3 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. ரஹானே- ரோஹித் சர்மா ஜோடி நிதானமாக விளையாடி ரன்களைக் குவித்தது.
ரஹானே 115 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய ரோஹித் சர்மா 212 ரன்கள் அடித்து அணிக்கு வலுசேர்த்தார்.
இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்திருந்த போது அணியை டிக்ளேர் செய்வதாக கேப்டன் விராட் கோலி அறிவித்தார். தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி 9 ரன்களுக்குள் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது.
போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.