வவுனியாவில் விழிப்புலனற்றோரிற்கான குற்றெழுத்து வழிகாட்டி பெயர்பலகை!
“விழிப்புலனற்றோரிற்கான குற்றெழுத்து வழிகாட்டி பெயர்பலகை” வவுனியா மாவட்டசெயலகத்தில் இன்று காலை திறந்து வைக்கபட்டது.
“மாற்று வலுவுள்ளோருக்கான வலுவூட்டல் அமையத்தின்” ஏற்பாட்டில் லயன்ஸ் கிளப்பின் அனுசரணையில் குறித்த நிகழ்வு மாவட்டசெயலக வளாகத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட வவுனியா மாவட்டசெயலாளர் எம்.கனீபா குற்றெழுத்து வழிகாட்டி பெயர்ப் பலகையினை திறந்துவைத்தார்.
இதன் மூலம் விழிப்புலன்றறவர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள திணைக்களங்களிற்கு இலகுவாக பயணிக்க கூடிய வசதி ஏற்படுத்தபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விசேட தேவையுடையவர்களிடம் ஏதோ ஒரு திறமை நிச்சயம் மறைந்திருக்கும். இதனை நாம் கண்டுகொண்டால் அவர்கள் எமக்கு பாரமாக இருப்பார்கள் என்ற சமூகத்தின் எண்ணத்தை அகற்ற முடியும். அந்த விடயத்தை கண்டுபிடிப்பது மாத்திரமே எமது நடவடிக்கையாக இருக்கவேண்டும். அதன் மூலம் இந்த நாட்டிற்கும் குடும்பங்களிற்கும் பொருளாதார ரீதியான நன்மைகளை பெற்றுகொள்ளமுடியும் என்று மாவாட்ட அரச அதிபர் எம்.கனீபா, இதன்போது கருத்து தெரிவித்தார் .
நிகழ்வில் நகரசபை உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம், சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.சீனிவாசன், மதகுருமார், உதவி மாவட்ட செயலர் ந.கமலதாஸ், மாற்றுவலுவுடையவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை