காலம்..!
நதியானதுன் வாழ்வு
அது வற்றுங் கிளைவிடும்
பரவும் பாயும் உறையும் என
நிறையும் நிகழ்வுகளால் வரையப்பட்டவன் நீ
ஒரு பட்டாம் பூச்சியாய்
மகிழ்வெறியும் நாட்களை நம்பாதே
அதன் சிறகும் ஓர் நாள் கலையும் பின் சனிக்கும்
ஒரு வானமாய் மகிழ்வெறியாதே
அதுவும் கறுக்கும் பின் வெளிக்கும்
ஒரு நட்சத்திரமாய் மகிழ்வெறியாதே
அதுவும் ஓர் நாள் விடியும் பின் விழும்
நிகழ்தகவின் சட்டையை அணிந்து
காலம் உன்னைச் சுமக்கிறது
நீர்க்குமிழியின் கண்களை அணிந்து
காலம் உன்னைப் பார்க்கிறது
குமிழிகள் உடைவதும்
குமிழிகள் பெருகுவதும்
குமிழிகள் கடலாவதும்
குமிழிகள் காணாமல் போதலும்
குமிழி மருங்கின் விசையினைப் பொறுத்தே
உனது விசையில் இசையும் காலம்
உன்னை எழுதிக்கொண்டேயிருக்கும்
நீ வரைவது வண்ணங்களாவதும்
வற்றிப் போவதும் எண்ணங்களின் கனதியைப் பொறுத்தே
நீ காற்றைச் சிறகாக்கி பற
காலத்தைக் கடலாக்கி நீந்து
உன்னைப் பொத்தகமாக்கிப் பாரு
காலத்தின் புன்னகையை உணர்வாய்
ஏனெனில் காலம் ஒரு அற்புத விளக்கு
பட்டாம் பூச்சிகளுக்கு மட்டும்.
த.செல்வா-
22.10.2019
முல்லைத்தீவு
அது வற்றுங் கிளைவிடும்
பரவும் பாயும் உறையும் என
நிறையும் நிகழ்வுகளால் வரையப்பட்டவன் நீ
ஒரு பட்டாம் பூச்சியாய்
மகிழ்வெறியும் நாட்களை நம்பாதே
அதன் சிறகும் ஓர் நாள் கலையும் பின் சனிக்கும்
ஒரு வானமாய் மகிழ்வெறியாதே
அதுவும் கறுக்கும் பின் வெளிக்கும்
ஒரு நட்சத்திரமாய் மகிழ்வெறியாதே
அதுவும் ஓர் நாள் விடியும் பின் விழும்
நிகழ்தகவின் சட்டையை அணிந்து
காலம் உன்னைச் சுமக்கிறது
நீர்க்குமிழியின் கண்களை அணிந்து
காலம் உன்னைப் பார்க்கிறது
குமிழிகள் உடைவதும்
குமிழிகள் பெருகுவதும்
குமிழிகள் கடலாவதும்
குமிழிகள் காணாமல் போதலும்
குமிழி மருங்கின் விசையினைப் பொறுத்தே
உனது விசையில் இசையும் காலம்
உன்னை எழுதிக்கொண்டேயிருக்கும்
நீ வரைவது வண்ணங்களாவதும்
வற்றிப் போவதும் எண்ணங்களின் கனதியைப் பொறுத்தே
நீ காற்றைச் சிறகாக்கி பற
காலத்தைக் கடலாக்கி நீந்து
உன்னைப் பொத்தகமாக்கிப் பாரு
காலத்தின் புன்னகையை உணர்வாய்
ஏனெனில் காலம் ஒரு அற்புத விளக்கு
பட்டாம் பூச்சிகளுக்கு மட்டும்.
த.செல்வா-
22.10.2019
முல்லைத்தீவு
கருத்துகள் இல்லை