வடக்கு, கிழக்கு இணைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது!

ஜனாதிபதித் தேர்தலை அடிப்படையாக வைத்து தமிழ்க் கட்சிகள் முன்வைத்த 13 அம்சக் கோரிக்கைகளில் பல நியாயமானவை. அவற்றை ஏற்றுக்கொள்கின்றோம். எனினும், வடக்கு, கிழக்கு இணைப்பு என்ற கோரிக்கையை மாத்திரம் ஏற்றுக்கொள்ள முடியாது.”


இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு, கிழக்கின் தமிழ்த் தரப்பு 13 கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைத்துள்ளனர். இதில் வடக்கு, கிழக்கை இணைக்கும் கோரிக்கைக்கு நாம் இணங்கவில்லை.

வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம். ஆகவே, அதனை எமக்குத் தாருங்கள் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது. கிழக்கில் முஸ்லிம் மக்கள் அதிகமாகவும், சிங்களவர்கள் ஓரளவும் வாழ்கின்றனர். திருகோணமலையை எடுத்துக்கொண்டாலும் யாழ்ப்பாணத்தை எடுத்துக்கொண்டாலும் அங்கு சிங்களவர்கள் வாழ்கின்றனர். ஆகவே, அவர்களை நிராகரித்து வடக்கு, கிழக்கைத் தனி அலகாக அங்கீகரிக்க முடியாது.

எனினும், தமிழர் தரப்பு முன்வைத்த பல கோரிக்கைகள் நியாயமானவையாக உள்ளன. அவை ஏற்றுக்கொள்ளக்கூடியவை. வடக்கில் தனியார் நிலங்களை மீண்டும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதும் நியாயமானது. இப்போது இவ்வாறான மோசமான சட்டம் தேவையில்லை. அதேபோல் இப்போது கொண்டுவரும் சட்டமும் மோசமானது. அதனை நாமும் எதிர்க்கின்றோம்.

வடக்கு, கிழக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆகவே, தமிழ்க் கட்சிகளின் 13 கோரிக்கைகளில் பிரதான காரணிகளுடன் நாம் முரண்படவில்லை. ஆனால், வடக்கு, கிழக்கு இணைப்பு மாத்திரம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை” – என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.