உல்லாசத் தளத்தை தகர்க்க வட கொரியத் தலைவர் உத்தரவு!

தென் கொரியாவுடன் இணைந்து நிர்மாணித்த உல்லாசத் தளத்தை தகர்ப்பதற்கு, வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார்.


மவுண்ட் கும்காங் (Mount Kumgang) பகுதியில் உள்ள குறித்த சுற்றுலாப் பயணிகள் வளாகம், பயனற்றுப் போய் இருப்பதாகத் தெரிவித்து அதை தகர்க்குமாறு கிம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை எழில்மிக்க மலைப்பாங்கான இடத்தில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த உல்லாசத் தளத்துக்கு, ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான தென்கொரியர்கள் சுற்றுலா சென்று வந்தனர்.

ஆனால், அங்கீகரிக்கப்பட்ட பாதையைத் தாண்டிச் சென்ற தென் கொரியப் பயணி ஒருவரை, வட கொரிய ராணுவ வீரர் சுட்டுக் கொன்றதால், கடந்த 2008 ஆம் ஆண்டு அந்த உல்லாசத் தளத்துக்கான பயணம் திடீரென நிறுத்தப்பட்டது.

வட கொரியாவுக்கு அதிகமான அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் அந்த உல்லாசத் தளத்துக்கு மீண்டும் பயணிகளை வரவழைக்க வட கொரியா பல ஆண்டுகளாக முயற்சிகளை மேற்கொண்டது.

ஆனால், பியோங்யாங் மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்துலகத் தடைகள் காரணமாக அது சாத்தியமற்றுப்போனது.

தற்போது, அங்குள்ள கட்டடங்கள், வட கொரியப் பண்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை என்றும், பேரிடர்க்கால முகாம்களைப் போல் அவை அழகற்றுக் காணப்படுவதாகவும் வடகொரியத்தலைவர் கிம் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, நவீனமான புதிய கட்டடங்களுக்கு வழிவிட்டுப் பழைய கட்டடங்கள் இடிக்கப்படுவதாக, வட கொரியாவின் உத்தியோகபூர்வமான செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்தத் தகவல் குறித்து, உல்லாசத் தலத்தை உருவாக்கிய Hyundai Asan நிறுவனம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. 190 மில்லியன் டொலர் செலவில், அந்த உல்லாசத் தளம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.