இளைஞன் கொலை விவகாரத்தில் பத்துபேர் கைது!!

பன்னிப்பிட்டிய, தெபானம பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பன்னிப்பிட்டிய தெபானம பகுதியில் தனியார் கல்வி நிறுவனத்திற்கு முன்பாக குறித்த இளைஞர் இன்று (புதன்கிழமை) அதிகாலை 12.20 மணியளவில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

தெபானம பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார்.

நீண்டகாலமாக இருந்த தனிப்பட்ட தகராறினால் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.