மலேசியாவில் கைது செய்யப்பட்ட தமிழர்களின் உறவுகளை விடுவிக்கும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் போராட்ட அறிவிப்பு!!
கடந்த வாரங்களில் மலேசியாவில் இரு தமிழ் அரசியல்வாதிகள் உட்பட 25 வரையான தமிழர்கள் மலேசிய அரசால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் மீது தமிழீழ விடுதலை புலிகளுக்கு பணம் அனுபுதல், தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்திற்கு உதவியமை,
போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.
இவர்களின் விடுதலைக்காக இவர்களின் குடும்பத்தவர்கள் அவர்களை விடுதலை செய்யும் வரையான உணவு தவிர்ப்பை ஆரம்பித்துள்ளார்கள்.
மலேசிய தமிழர்களின் விடுதலைக்கு உலகத்தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது.
ஈழத்தமிழர்கள் தொடர்பாக மலேசியத் தமிழர்கள் கடந்த காலங்களில் தமது பூரண ஆதரவையும்
தம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்கி வந்துள்ளனர்.
மேலும் மலேசிய நாட்டில் ஈழவிடுதலை தொடர்பான நினைவெழுச்சி நாட்கள், எழுச்சி நிகழ்வுகள், நினைவுகூறல்களை மிகவும் உணர்வுபூர்வமாக கடைப்பிடித்து வருகின்றனர்.
மேலும் மலேசிய தமிழர்கள் தமிழ் மொழியை வளர்ப்பதிலும், தமிழ் மொழிக் கல்வியிலும் மிகுந்த ஆவர்வம் கொண்டவர்கள்.
இப்படியாக தமிழ் மீதும் தமிழீழ விடுதலை மீதும் மிகுந்த பற்றுறுதி கொண்ட மக்களை அடக்கி ஒடுக்க மலேசிய அரசு எடுத்துவரும்
நடவடிக்கைகள் கைதுகள் கண்டிக்கத்தக்கது.
2009க்கு பின் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் மௌனித்து போய்விட்டதாகவும். 2009க்கு பின் விடுதலைப்புலிகள் சார்பில் எவ்வித
தாக்குதல்களோ வேறு செயற்பாடுகளோ இலங்கையில் இடம் பெறவில்லை என்பதை உலக நிறுவனங்கள் உறுதிப்படுத்தி உள்ளன.
அத்துடன் பல நாடுகள் பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கியும் உள்ளன.
மேலும் இலங்கையில் ஈழத்தமிழர்கள் தமிழீழ நினைவெழுச்சி நாளை மிகவும் உணர்வுடன் நினைவுகூரப்படும் நிலையில், மலேசியாவில் இவ்வாறான கைது நடவடிக்கைகள் வருந்தத்தக்கது.
மாவீரர் நாள் மே18 போன்ற நிகழ்வுகளில் தம்மை உணர்வுபூர்வமாக இணைத்து செயற்பட்டவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டமை வருந்ததக்கது.
தமிழினம் அமைதி வழியில் தமது கோரிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் தமிழினத்தின் அறவழியான செயற்பாடுகளை முடக்கும் மலேசிய அரசின் செயல்களுக்கு எமது எதிர்ப்பையும், கைது செய்யப்பட்டவர்களின் விடுதலைக்கான எமது ஆதரவையும் தெரிவிப்போம்.

கருத்துகள் இல்லை