கண்ணீர் என்பது கவசமா!!
சராசரியாக ஆண் மாதம் ஒரு முறையும் பெண் மாதம் ஐந்து முறையும் அழுவதாக ஆய்வு எடுத்துக் காட்டுகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் அதிகம் அழுகிறார்கள். பெரும்பாலான கலாச்சாரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அழுவது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆண்கள் அழுவதைச் சமூகம் எளிதில் ஏற்பதில்லை.
தமிழ் இலக்கிய மரபானது தொல்காப்பியத்தில், நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை ஆகிய எட்டு வகையான உணர்வின் நிலைகளை எடுத்தியம்பியிருக்கிறது. அந்த எட்டில் ஒன்றுதான் அழுகையும்.
அழுகை என்பது ஒருவகை உணர்வு. கண்கள் தன் வழியே நீரை வெளிப்படுத்தும் நிலை அழுகை. சோகம், கவலை, வலி, வேதனை, துக்கம், துயரம் என அனைத்து நேரங்களிலும் அழுகை வெளிப்பட்டுவிடும். அதுவும் கண்ணீர் பெண்களுக்கே சொத்தான ஒன்றெனக் கருதுகின்றனர். உண்மையில் கண்ணீர்விட்டு எதையும் சாதித்துவிடலாம் என எண்ணினால் அது தவறான ஒரு கருத்தே ஆகும். கண்ணீரை ஆயுதமாக்கி நாம் சாதிக்கும் எந்த ஒரு செயலும் இறுதிவரை நிறைவைத் தந்துவிடாது. ஒரு கட்டத்தில் காய்ந்துவிடும் கண்ணீரைப்போலவே அந்த விடயமும் சிதறிவிடும்.
உரிமைகளுக்காகவோ அன்றி தேவைகளுக்காகவோ கண்ணீர்விட்டு நிற்பது இயல்பான ஒன்றாகும். உறவுகளிடம் தொடங்கி இல்லறத்தில், ஏன் அமைச்சரவையில் கூட பெண்கள் கண்ணீர்விட்டு நியாயங்களை, தேவைகளை, காரணத்தை கூறுகின்றனர். இந்நிலை ஆரோக்கியமானதல்ல. கருப்பைகளே பெண்களுக்குச் சொந்தமானவை, கண்ணீர்ப்பைகள் அல்ல, கண்ணீர் ஆனந்தத்தில் வரலாம், அதிஉச்ச துயரத்தில் வரலாம், தொட்டதற்கெல்லாம் வரக்கூடாது.
“பெண்களின் ஆயுதம் கண்ணீர்” என்பர்.
இந்த ஆயுதம் எங்கு உயர்ந்திருக்கிறதுது? எங்கு தாழ்ந்திருக்கிறது? எந்த நாட்டிற்குச் சவாலாகியிருக்கிறது? எந்த உறவிடம் கெஞ்சியிருக்கிறது? எந்த நேசத்தை தொலைத்திருக்கிறது? எந்தத் தேசத்தை இழந்திருக்கிறது? எங்கே தன் வீரியத்தைக் கூட்டியிருக்கிறது, எங்கே தன் வலிமையை இழந்திருக்கிறது? எங்கே தன் ஆழுமையை விழுங்கியிருக்கிறது? என ஒவ்வொரு பெண்ணிடமும் ஒவ்வொரு கதையுண்டு.
உண்மையில் ஒரு பெண்ணிடம் கண்ணீர் கொப்பளிக்கிறது என்றால் அங்கு அவளது உள்மனம் அளவில்லாது நொருக்கப்படுகின்றது என்பதே அர்த்தம், ஆனாலும் அவளது கண்ணீர் எந்த இடத்தில் அர்த்தமற்றுப்போகிறதோ அங்கே அவள் மௌனித்துவிடுகின்றாள் என்பதும் உண்மையே. தன்னைத்தானே இறுக்கமாக்கிவிடுகின்றாள். மெல்ல மூடிக்கொள்ளும் சிப்பிபோல அவள் தன்னை இறுக்கிக்கொண்டால் மீண்டும் ஒருமுறை அவள் நெகிழ்தல் என்பது சாத்தியமற்ற ஒன்றே ஆகும்.
எது எப்படியாயினும் கண்ணீரால் ஒரு விடயத்தை சாதித்துவிடலாம் எனும் எண்ணப்போக்கை அகற்றி வாழ்வதே மிகச்சிறப்பானதாகும்.
கோபிகை.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை