சக்தி பிறக்குது நாடகம் நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 40 வது ஆண்டு நிறைவு மாணிக்கவிழாவில் விரைவில்!!
30 வருடங்களின் பின் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் சக்தி பிறக்குது நாடகத்தை நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 40 வது ஆண்டு நிறைவு மாணிக்கவிழாவில் 27.10.2019 அன்று மேடையேற்றுகிறோம். 1989 ஆண்டு தமிழ்ச்சங்கத்தின் 10வது ஆண்டு நிறைவுவிழாவிலும் சக்திபிறக்குது நாடகத்தை மேடையேற்றியிருந்தோம். இம்முறை பேராசிரியர் மௌனகுரு முன்னிலையில் நாடகத்தை மேடையேற்றுவது கூடுதல் மகிழ்வு.
நேர அளவு கருதியும் காலப்பொருத்தம் கருதியும் எழுத்துருவைச் சுருக்கவும் சில மாற்றங்களைச் செய்யவும் பேராசிரியர் அனுமதி வழங்கியிருந்தார். எம்மீது அவர் வைத்த நம்பிக்கைக்கு நன்றி. நேற்று முன்தினம் (22.10.2019) பேராசிரியர் நோர்வே வந்தடைந்தவுடன் எமது ஒத்திகையிலும் பங்கேற்றார். நேற்றைய தினம் இவரின் முன்னிலையில் இசையுடன் முழு நாடகத்தையும் நிகழ்த்திக் காட்டினோம். நாடகத்தை மேலும் மெருகூட்ட பேராசிரியர் துணை செய்வது கலைஞர்களுக்கு கூடுதல் உற்சாகத்தைத் தருகிறது.
இன்னொரு விடயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். நாடகத்தின் இசைநெறியாளர் சுந்தர் கணேசனின் (குட்டி மாஸ்டர்) தாயார் கடந்த திங்கட்கிழமை (21.10.2019) அன்று காலமாகிய நிலையிலும் அவர் நேற்று எமது ஒத்திகையில் பங்கேற்று இசைக்கலைஞர் ஜெயாவுடன் இணைந்து நாடகத்துக்கான முழுமையான இசையினை வழங்கியிருந்தார். . அவரது கலைப்பற்றுக்கும், பொறுப்புணர்வுக்கும் தலைவணங்குவதுடன் அவரது கரங்களைத் தோழமையுடன் பற்றிக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை