சென்னையில் உருவாகும் ஐபோன்!
ஆப்பிள் தனது பிரபலமான ஐபோன் எக்ஸ்ஆர் போன்களை இந்தியாவில் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல்போன் உற்பத்தியாளராகக் கருதப்படும் இந்தியா, தற்போது குறைக்கப்பட்டுள்ள பெருநிறுவன வரியின் காரணமாக ஸ்மார்ட்போன் உற்பத்தியை உள்நாட்டில் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.
இந்தியா தற்போது ஆப்பிள் போன்ற உலகளாவிய நிறுவனங்களை ஈர்ப்பதற்கும், ஃபாக்ஸ்கான் (Foxconn) மற்றும் விஸ்ட்ரான் (Wistron) போன்ற ஒப்பந்த உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கும் முடிவெடுத்துள்ளது. அமெரிக்காவுடனான சீனாவின் வர்த்தக மோதலால், ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் மாற்று சந்தைகளுக்குக் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடந்து வரும் வர்த்தகப் போரின் தாக்கத்தை மென்மையாக்க ஆப்பிள் போன்ற நிறுவனங்களும், இந்தியாவை ஏற்றுமதி மையமாகப் பயன்படுத்த முனைகின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் தெற்காசியாவின் முக்கியமான பொருளாதாரத்தை, ஸ்மார்ட்போன் உற்பத்திக்கான மையமாக நிலைநிறுத்த முயற்சி செய்கிறது.
இந்த நிலையில், ஆப்பிள் தனது பிரபலமான ஐபோன் எக்ஸ்ஆர் போன்களை இந்தியாவில் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. இந்த போன்கள் டைபே (Taipei)வைத் தளமாகக் கொண்ட ஒப்பந்த உற்பத்தியாளரான ஃபாக்ஸ்கான் (Foxconn)இன் இந்திய தொழிற்சாலையில் இணைந்துள்ளன.
இது கலிபோர்னியாவைத் தளமாகக்கொண்ட கூபர்டினோ (Cupertino) நிறுவனத்துக்கு முழுமையாகக் கட்டமைக்கப்பட்ட சாதனங்களை இறக்குமதி செய்வதில் அதிக வரி வசூலிப்பதைத் தவிர்ப்பதற்கும், இந்தியாவில் தனது சொந்த சில்லறை வர்த்தகத்தைத் திறப்பதற்குமான உள்ளூர் ஆதார விதிமுறைகளைப் பூர்த்தி செய்வதற்கும் உதவுகிறது.

ஐபோன் எக்ஸ்ஆரில் அதிக விளம்பர சலுகைகளை வழங்கும் ஆப்பிள், இந்த ஆண்டு இரண்டாவது காலாண்டில் இந்தியாவில் பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது. கடந்த வாரம் ஆப்பிள் சென்னையில் உள்ள தனது ஃபாக்ஸ்கான் உற்பத்தி ஆலையில் ஐபோன் எக்ஸ்ஆர் தயாரிப்பைத் தொடங்கியதாக ஃபர்ஸ்ட் போஸ்ட் கூறியுள்ளது.
இதைப் பற்றி 4,153 பேர் பேசுகிறார்கள்
‘Assembled in India’ என்ற குறிச்சொல்லுடன் ஐபோன் எக்ஸ்ஆர் நேற்று (அக்டோபர் 22) முதல், விற்பனையாளர்களிடம் 64 ஜிபி பதிப்புக்கு 49,900 ரூபாய் விலை மதிப்பிலிருந்து விற்பனை ஆகி வருகிறது. சாம்சங் மற்றும் ஒன்ப்ளஸின் பிரீமியம் ஸ்மார்ட்போன்களின் கடுமையான போட்டிக்கு மத்தியில், இந்தியாவில் ஐபோன் நிறுவனம் விலையைக் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை