இவர்கள் தேடுவது கல்லறைகளை அல்ல..!கருவறைகளை!

இவர்கள் தேடுவது
 கல்லறைகளை அல்ல..!
கருவறைகளை!

தமது அடையாளங்களை அறிமுகப்படுத்திய விருட்சங்களின் வேர்களை...!

தாம் முளைத்தெழுந்த
விதைகள் இருந்த விதைகுழிகளை துளிர்த்த தளிர்கள் தேடுகின்றன!

தேடட்டும் விட்டுவிடுங்கள்!
ஒரு நாள் தமது மூலங்களை கண்டுகொள்வார்கள்!

காணும் பொழுதில்
 அவர்களும் விருட்சங்களாக
விண் தொட ஓங்கி எழுவார்கள்!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.