வாழ்க்கை என்றால் என்ன என நினைப்பதற்குள் முடிந்து போகிறது வாழ்வு.!
வாழ்வின் மெய்யான பொருள் பணம் மட்டும் தான் என எண்ணி இந்த உலகில் பெரும்பான்மை மாந்தர்கள் பணம் தேடும் இயந்திரங்களாக ஓடி கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் சடப்பொருளான பணத்திற்கும் சொத்துக்களுக்கும் மதிப்பை மனதிற்கும் உறவுகளுக்கும் கொடுக்க மறந்து போகின்றார்கள்.
வாழ்வின் தேடும் செல்வம் எல்லாம் ஒரு நாள் எம்மை விட்டு செல்லும். அதனால் தான் அதற்கு செல்வம் என்று பெயர்.
வாழ்வின் உண்மையான பொருள் வாழ்தலின் அழகே. அந்த அழகை கொடுப்பது உண்மையான பொருள் நிறைந்த அன்பு நிறைந்த மனம் நிறைந்த வாழ்வு ஒன்றே.
ஆனால் இதை யார் சொன்னாலும் அவர்களை செல்லாக் காசாக பார்க்கும் இந்த உலகம். அவர்களுக்கு பிழைக்கத் தெரியாதவர்கள் என்றும் ஒரு பெயரை சொல்லி அழைப்பார்கள்.
மணி கட்டின மாடு சொன்னால் தான் மந்தைக் கூட்டத்திற்கு ஏறும். (பணம்) இருப்பவன் சொன்னால் தான் இந்த பூமியில் இருப்பவர்கள் எதையும் கேட்பார்கள்.
அதற்காக இந்த உண்மை நிகழ்வுப் பதிவு:
உலகமே போற்றும் செல்வந்தருள் ஒருவராக பார்க்கப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) உடல்நலம் குன்றி அவரது 56 வயதில் உலகைப் பிரிவதற்கு முன்பாக விட்டுச் சென்ற செய்தி இது:
"வர்த்தக உலகில் வெற்றியின் உச்சம் தொட்டேன்.
மற்றவர் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது.
நோயுற்று படுக்கையில் இருக்கும் இப்பொழுது என் முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன்.
பெற்ற புகழும், செல்வமும் அதனால் அடைந்த பெருமையும் இப்போது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது.
உங்கள் காரை ஓட்ட யாரையாவது நியமிக்கலாம்.
உங்களுக்காக உழைக்க எத்தனைப் பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம்.
ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் வலிகளையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது.
எந்தப் பொருள் தொலைந்தாலும் மீண்டும் தேடிவிட முடியும்.
ஆனால் வாழ்க்கை தொலைந்துவிட்டால்?
திரும்ப கிடைக்கவே கிடைக்காது!
வாழ்க்கை எனும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்த காட்சியில் நடித்துக்கொண்டிருந்தாலும் நாடகம் முழுமையாக முடியும் என்று சொல்ல முடியாது.
நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் திரை விழலாம்.
நாம் பக்குவமடையும்போதுதான் சில விஷயங்கள் புரியும்.
முப்பது ரூபாய் கடிகாரமும் சரி, மூன்று இலட்சம் ரூபாய் கடிகாரமும் சரி.. ஒரே நேரம்தான் காட்டும்.
செலவழிக்க வாய்ப்பு இல்லாதபோது உங்கள் பணப்பையில் நூறு ரூபாய் இருந்தாலும் ஒன்றுதான்.
ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான்.
நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும் 30,000 சதுர அடி பங்களாவில் வசிப்பதும் ஒன்றுதான்.
ஆகவே..!
உங்களைச் சுற்றிலும் இருக்கும் அனைவரிடமும் அன்புடன் பேசிப் பழகுங்கள்."
ஆம் இதை அவர் இந்த உலகிற்கு சொல்லி இருக்கின்றார் என்றால் எல்லாம் இருந்தும் பணம் இருந்தும் இறுதி காலத்தில் தன்னைச் சுற்றி உறவுகளை தேடி வைக்கவில்லையே என்ற கவலை அவருக்குள் எழுவதை உணர முடியும்.
எத்தனை பேருக்கு இவர் சொன்ன உண்மை புரியும். கண் கெட்ட பின் தான் பலரும் சூரிய வணக்கம் செய்கிறார்கள்.
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. அதை பொருள் தேடி மட்டும் வாழ்ந்து வாழ்தலின் பொருளற்றதாக ஆக்காதீர்கள்.
வாழ்வின் பொருளை வாழ்வாங்கு வாழ்ந்து பெற்று கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை