இயக்கச்சி மீனவர்களின் வாழ்வாதாரம் நிலைத்திருக்க செய்யும் நடவடிக்கை வெற்றியளிப்பு!!
இயக்கச்சி மீனவர்களின் வாழ்வாதாரம் நிலைத்திருக்க செய்யும் நடவடிக்கை உயர்.திரு.த.குருகுலராசா சேர் அவர்களின் முயற்சியால் வெற்றியளிப்பு.
கடந்த போரின் போது ஆனையிறவு இராணுவ முகாமை பாதுகாக்கும் நோக்கோடு இயக்கச்சி கடல் நீரேரி பகுதியான கொட்டு வைத்த தீவுக்கு அருகாமையில் கடலுக்கு சமாந்தரமாக மண் அணைகளால் மிக உயரமும்,நீளமுமான பாதுகாப்பு அரண் இலங்கை இராணுவத்தினரால் 1990களின் ஆரம்ப காலங்களில் அமைக்கப்பட்டு மழை காலங்களில் சுண்டிக்குளம் கடல் பகுதிகளில் இருந்து ஆணையிறவு கடல் நீரேரிக்கு வரும் கடல் வளங்களின் வருகை தடைசெய்யப்பட்டு இயக்கச்சி மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாக முடங்கியிருந்தது.
இந்த நிலைமைகளை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களின் கவனத்திற்கு வட்டார பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் த.றமேஸ் அவர்களால் கொண்டு செல்லப்பட்டு பின்பு எமது முன்னாள் கௌரவ கல்வி அமைச்சர் த.குருகுலராசா சேர் அவர்களினால் புலம்பெயர் உறவுகளின் நிதிப் பங்களிப்பில் அந்த மண் அணை கனரக வாகனங்களின் உதவியுடன் அழிக்கப்பட்டு இயக்கச்சி மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்பட்டதுடன் அந்த மீனவக்குடும்பங்களினால் தொடர்புடைய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை