ராஜபக்ஷர்களிடமிருந்து நாட்டை மீட்பதற்கான இறுதி தருணமே இந்த தேர்தல்- ஹிருணிகா!!

ராஜபக்ஷர்களிடமிருந்து நாட்டை மீட்பதற்கான இறுதி தருணமாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காணப்படுகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஹிருணிகா மேலும் கூறியுள்ளதாவது, “ஜனநாயக நாட்டுக்கு சர்வாதிகார ஆட்சியாளர் ஒருவர் அவசியமா? என்ற கேள்வி தற்போது அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
இதேவேளை பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினராக துமிந்த சில்வா இருந்த காலத்திலேயே கொலன்னாவ பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரம் பலப்படுத்தப்பட்டு இருந்தது.
இவ்விடயம் தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷவுக்கு பலமுறை அறிவித்தும் அவர் அதனை கவனத்தில் கொள்ளவில்லை.
மேலும், மஹிந்த ராஜபக்‌ஷ முன்பாக, தான் அமர்ந்திருந்த போதுதான், தனது தந்தையான பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திரவுக்கு முடிவு கட்ட வேண்டுமென கோட்டாபய  ராஜபக்ஷ  கூறினாரென, குற்றப்புலனாய்வு பிரிவுக்கு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா வழங்கியிருந்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட போன்றவர்களை கொலைச் செய்யும் எண்ணம் ராஜபக்ஷர்களை தவிர வேறெவருக்கும் இருக்கவில்லை.
எனவே இத்தகையவர்களிடமிருந்து நாட்டை மீட்பதற்கான இறுதித் தருணம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.