மட்டுவில் சமூகநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கலந்துரையாடல்!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் சமூகநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் நேற்று (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் மாவட்டசெயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
பல்லினமக்கள் மத்தியில் ஏற்படுகின்ற மனகசப்புக்கள், கீளேசங்கள் புரிந்துணர்வு இன்மை ஆகியவிடயங்களுக்கு தேவையான அறிவுரைகள் ஆலோசனைகளை கிராமமட்டத்தில் இரு சமூகங்களுக்கு இடையே வழங்குவதுடன் ஒற்றுமையை மேலோங்கசெய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த நிலையில், சமாதானமும் சமூகப்பணியும் எனும் நிறுவனம் இச்செயற்திட்டத்தின் பங்கெடுக்கவுள்ளது. அதுபோன்று கிறிஸ்த்தவ வாலிபசங்கமும் இதில் இணைந்து இளைஞர்கள், சிறுவர்கள், முதியோர்கள் மனங்களில் ஒற்றுமைக்கான வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளது.
இதில் இளைஞர்கள், சிறுவர்கள், முதியோர்களுக்கு இடையே ஏற்படுகின்ற சவால்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பது, வாழ்வாதார இயலுமை, விவசாய உற்பத்திகளை மேம்படுத்தி சந்தைப்படுத்தலை அமைத்துக் கொடுத்தல் போன்ற, கிராம மட்டமக்களிடையே உள்ளுர் பொறிமுறைக்கமைவாக மக்களை வலுவூட்டல் செய்து, ஆதரவுவழங்குவதற்கும் USAID நிறுவனத்துடன் இணைந்து ஆறு மாதகாலதிட்டத்தினை முன்னெடுப்பதற்குள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல்லின சமூகம் வாழுகின்ற நிலையில் இன சமூக நல்லிணக்கத்தை மக்களின் உள்ளங்களிலிருந்து ஏற்படுத்துவதற்கு அரசசார்பற்ற நிறுவனமான இந்நிறுவனங்கள் முன்வந்து செயற்படுத்துவது என்பது ஒரு சிறப்பானவிடயம் எனவும் உள்ளுரிலே சிறந்த சமாதான சமூக சமூகநல்லிணக்க பொறிமுறையான மாவட்டத்தில் கோரளைப்பற்று தெற்கு, ஏறாவூர்பற்று, காத்தான்குடி, ஆரையம்பதி ஆகிய நான்கு பிரதேச செயலகங்களிலும் நல்லிணக்கம் தொடர்பான திட்டத்தினை முன்னெடுத்திருப்பது சிறப்பானவிடயமே என்று இதில் கலந்து கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கருத்து தெரிவித்தார்.
இந்த செயற்திட்டத்தை உண்மையாகவே மக்கள் மத்தியில் எடுத்து சென்று அவர்களின் மனங்களினிடையே மாற்றங்களை ஏற்படுத்தி கொள்வது சிறந்த விடயமாகும் என அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில் USAID பிரதிநிதியான ரங்ககேமற்றும் நவுஸ்சாட் உட்பட மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி.ஸ்ரீகாந்த், உதவி மாவட்டசெயலாளர் எ.நவேஸ்வரன், பிரதிதிட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அமிர்தலிங்கம், நான்கு பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், கிராமசேவகர்கள் மற்றும் சமூகநல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் கிராமங்களில் இருந்துவருகைதந்த பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை