குமரியில் கடல் சீற்றம்!!

தீபாவளி விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ள நிலையில் இரண்டாவது நாளாக நேற்றும் (அக்டோபர் 26) கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. படகுப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதே சமயத்தில் சில நாட்களாக பூத்துறை பகுதியில் கடல் சீற்றமாக இருந்தது. இந்த நிலையில் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியிலும் இரண்டு நாட்களாக கடல் அலையின் ஆக்ரோஷம் அதிகமாக இருந்ததை காண முடிந்தது.
இதனால் நேற்று கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்க போலீசார் தடை விதித்தனர். மேலும் யாராவது விபரீதத்தை அறியாமல் கடலுக்குள் இறங்கி குளிக்கிறார்களா எனவும் கண்காணித்தனர். எச்சரிக்கையையும் மீறி குளித்தவர்களை போலீசார் வெளியேற்றினர். இந்த நிலை இரவு வரை நீடித்தது. தற்காலிகமாகப் படகுப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் கோவளம், சின்னமுட்டம், ஆரோக்கியபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடல் சீற்றம் இருப்பதை காண முடிந்தது. கடல் சீற்றம் இரவு வரை நீடித்தது. இதனால் குமரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.