சுர்ஜித் நலமுடன் திரும்ப பிரார்த்திப்பதாக நடிகர் ரஜினி!
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டின் முன்பு கூடியிருக்கும் ரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லம் முன்பு நேற்று (அக்டோபர் 27) காலை அவரது ரசிகர்கள் குவிந்தனர். அதனையடுத்து வீட்டிலிருந்து வெளியே வந்த ரஜினி, ரசிகர்களை நோக்கி வணக்கம் வைத்து கையசைத்தார். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “எல்லாரின் இதயங்களிலும் வாழ்க்கையிலும் இந்த தீபாவளி வெளிச்சத்தைத் தர வேண்டும் என சொல்லி ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று கூறியவர்,
“இந்த நன்னாளில் பூமிக்கடியில் தவித்துக் கொண்டிருக்கும் சுர்ஜித் நலமுடன் வரவேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன். கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றை மூடியிருக்க வேண்டும். ஆழ்துளை கிணறு விவகாரத்தில் பெற்றோர்கள் மற்றும் அரசு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசை குறைகூற கூடாது. மீட்பு நடவடிக்கையில் அதிகாரிகள் விடாமுயற்சியுடன் ஈடுபட்டு வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “லதா ரஜினிகாந்த் குழந்தைகள் பாதுகாப்பிற்காக கமிட்டி அமைக்க வேண்டும் என்று தீவிரமாக முயற்சித்து வருகிறார். நிச்சயமாக விரைவில் அதற்கான வாய்ப்பு அமையும்” என்றும் ரஜினி தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
ஆழ்துளைக் கிணற்றில் பள்ளம் தெரியாமல் சிறு குழந்தைகள் விழுவது ஒரு தொடர் அவலமாக தமிழத்தில் இருக்கிறது.
ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும் பணி வெற்றி பெற வேண்டும்.
ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் விடுவதை குற்றமாகவும், அதற்கு பெருந்தொகையை அபராதமாகவும் அரசு விதிக்க வேண்டும்.
இதைப் பற்றி 3,758 பேர் பேசுகிறார்கள்
இதுபோலவே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆழ்துளைக் கிணற்றில் பள்ளம் தெரியாமல் சிறு குழந்தைகள் விழுவது ஒரு தொடர் அவலமாக தமிழகத்தில் இருக்கிறது. ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும் பணி வெற்றி பெற வேண்டும். ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் விடுவதை குற்றமாகவும், அதற்கு பெருந்தொகையை அபராதமாகவும் அரசு விதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை