பயங்கரவாதத்தை தற்போதைய அரசாங்கம் மீள் உருவாக்கிறது!
அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களுக்கு அடிப்பணிந்து தேசிய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மாத்தளையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது உங்களுக்கு நினைவிலிருக்கும். மீண்டும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு தேசிய பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தோம்.
பயங்கரவாதம் எந்த வகையிலும் நாட்டில் தலைத்தூக்காதவாறு தேசிய பாதுகாப்பு கட்டமைப்பை ஏற்படுத்தியிருந்தோம். ஆனால் தற்போதைய அரசாங்கம் அனைத்தையும் சீரழித்து விட்டது.
மறுப்புறம் அரசசார்பற்ற சர்வதேச நிறுவனங்களின் பங்குதாரர்களாக செயற்படும் இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் இராணுவத்தின் கௌரவத்தை சீரழித்து விட்டனர்.
புலனாய்வு துறையினர் மீது போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சிறையிலிட்டனர். புலனாய்வு துறை, பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு உள்ளிட்ட துறைகளை தேசிய பாதுகாப்பை மையப்படுத்திய செயற்படுத்தினோம்.
ஆனால் தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுக்கவே இந்த துறைகளை பயன்படுத்துகின்றது. எனவே தான் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியானது.
ஆகவே இவை எமது ஆட்சியில் சீர்செய்யப்படும் நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பை முன்னினலைப்படுத்தியே எமது செயற்பாடுகள் அமையும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை