டேவிட் மல்பாஸ் இந்தியாவில் மோடிநிர்மலா சீதாராமன் மற்றும் பிற உயர் அதிகாரிகளசந்திப்பு!
உலக நாடுகளின் வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, மக்களின் முன்னேற்றம் போன்றவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு உலக வங்கி செயல்பட்டு வருகிறது.
மேலும் வளரும் நாடுகளின் முதலீட்டு திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் பன்னாட்டு நிதி நிறுவனமாகவும் உலக வங்கி உள்ளது.
இந்நிலையில், பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் இந்தியா வந்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிற உயர் அதிகாரிகளைச் சந்தித்து அவர் விரிவான ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ் உரையாற்றும் போது, தொழில் செய்யத் தகுதியுடைய நாடுகளில் இந்தியா முன்னேறியிருப்பதாகக் கூறினார். ஆனால் பொருளாதார ரீதியாக இன்னும் பல சீர்திருத்தங்களை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும் வலிமைமிக்க நீதிமன்றங்கள், நில நிர்வாகம் போன்றவை தொழில் புரிவதற்கான சாதகமான சூழலை இந்தியாவில் ஏற்படுத்தும் என்று கூறியதோடு இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது இருப்பினும் அதன் வேகத்தை இன்னும் அதிகப்படுத்த இயலும் என்று அவர் கூறினார்.
உலக வங்கியின் மூத்த நிதி ஆலோசகர் மற்றும் நிர்வாக இயக்குனராக இந்தியாவைச் சேர்ந்த அன்ஷுலா கன்ட் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை