இன்று யாழ்ப்பாணத்தில் 5 கட்சி கூட்டம்!!
மீண்டும் 5 தமிழ் கட்சிகளிற்கிடையிலான சந்திப்பு இன்று யாழில் பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.
எனினும் இன்றைய சந்திப்பிலும் 5 கட்சிகளும் கலந்துகொள்ள வாய்ப்பில்லையென்றே அறியக்கிடைத்துள்ள நிலையில் ஒருவேளை, ஐந்து கட்சிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டாலும் கூட, எந்தவொரு இணக்கப்பாடு எட்டப்பட வாய்ப்பில்லையென்றே தெரிகிறது.
ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் பொதுக் கோரிக்கைகளை முன்வைக்க தமிழ் அரசுக்கட்சி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் மக்கள் கூட்டணி என்பன இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தன.
எனினும் அவர்களின் கோரிக்கைகளை எந்த பிரதான வேட்பாளரும் ஏற்காத நிலையில், அடுத்து என்ன செய்வதென்பதில் 5 கட்சிகளிற்குள்ளும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.
நேற்று முன்தினம் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர், இரண்டு வேறுபட்ட அறிக்கைகள் வரஇருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதன்படி, 5 கட்சிகளிற்குள் இணக்கப்பாடு எட்டப்பட முன்னரே நேற்று தமிழ் மக்கள் கூட்டணியின் நிலைப்பாட்டு அறிக்கை வெளியாகியதோடு, அதில் மக்கள் தாங்கள் விரும்பியவர்களிற்கு வாக்களிக்கலாமெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
5 கட்சிகள் இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு முன்னரே விக்னேஸ்வரன் தரப்பு தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளதால், இன்றைய கூட்டத்திற்கு அவர்கள் வருவதற்கான வாய்ப்பில்லையென்றே தெரிகிறது.
இந்த நிலையில் ஏனைய 4 கட்சிகளும் கலந்துரையாடலில் பங்குபற்றும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு முதல் வாக்கை இடலாம், பிரதான வேட்பாளர்களை ஆதரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் ஈ.பி.ஆர்.எல்.எவ் உள்ளது. ஆனால் இதற்கு நேர்மாறான நிலைப்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 3 கட்சிகளும் உள்ளன. ரெலோவின் ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளான ஒருவரை ஆதரிக்க முடியாதென்பது அந்த கட்சிகளின் நிலைப்பாடாக காணப்படுகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை