தவறிப்போனதா அரங்கம்? இது உண்மையின் ஆதங்கம்..!
மானசீகமான அந்த உண்மையைச்
சொல்ல நினைத்தும்,
தொண்டைக்குழிக்குள்
சிக்கித்தவித்தபடி
சொல்லமுடியாமல் மெல்ல
மென்று விழுங்கிக்கொண்டு,
அப்பால் தள்ளிப்போக விளைகிறது காலம்,
ஏனெனில் சொல்லப்போகும் அந்த உண்மையில்
எந்தவிதப் பக்கவாத்தியங்களையும்
அது துணையாய்ச் சேர்த்துக்கொள்ளவில்லை...
அந்தக் கலப்படமில்லாத உண்மையை ஏற்கும்
எந்தக்காதுகளும் மிகக்குறைந்த அளவிலான
கேள்தகவுக்குள் மட்டுமே வலம்வருகின்றன...
அவர் அந்தப்பக்கம், இவர் இந்தப்பக்கம்
என்ற பிரிவினைப்பாதையில் எல்லோரும் சேர்ந்து பயணிக்கவேண்டிய நேர்வழிப்பக்கம் முழுக்க முழுக்க
இருளுக்குள் மூழ்கிவிட்ட பரிதாபநிலை...
சூரியவெளிச்சத்தைத் தவறவிட்டு காலம்கடத்திவிட்ட நிலையில், ஒரு கைவிளக்குக்கூட கிடைக்கவில்லை என வருந்தியபடி பக்கவாத்தியங்கள் முழங்க இன்னமும் அவர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்....
மீண்டும் மீண்டும் பிரேத பரிசோதனைகளுக்காய்க்
கிளறி எறிகின்ற துர்நாற்றம்பிடித்த மண் விழுந்து, நம்பிக்கையோடு முளைக்கின்ற சிறுசெடிகளும் நாசமாய் வாடிப்போய்விடுகின்றன..
அந்தரங்கமாய் அங்கங்கே அரங்கேற்றும் நாடகங்களை உரிமைகோருபவர் அத்தனைபேரும் கூடிநின்று ஆடவேண்டிய அரங்கத்தை ஒட்டுமொத்தமாய்க் கோட்டை விட்டுவிட்டார்கள்....
-#காந்தள்-

கருத்துகள் இல்லை