மக்களிடம் ஐந்து தமிழ் கட்சிகளும் விடுத்துள்ள கோரிக்கை!!
மக்கள் தமது வாக்குரிமையைத் தவறாது பிரயோகிக்க வேண்டும் என ஐந்து தமிழ் கட்சிகளும் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தரப்பு யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கும் கூட்டம் இன்று மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இதன்போது அனைத்து வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவராத நிலையில் நாளை இடம்பெறவுள்ள தபால் மூல வாக்களிப்பில் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கோர முடியாதுள்ளதாகவும் ஐந்து தமிழ் கட்சிகளும் தெரிவித்துள்ளன.
இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
அதேபோன்று ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ அமைப்பின் செயலாளர் சிறீகாந்தா, வட மாகாண சபையின் பேரவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை